சனி தேவரை மகிழ்விக்க செய்ய வேண்டியவை: மக்கள் பொதுவாக சனி தேவரை ஒரு கொடூரமான தெய்வமாக கருதுகிறார்கள். ஆனால் உண்மையில் அது அப்படி இல்லை. அவர் அனைவரையும் உண்மையான நண்பர்களாக நடத்துகிறார். ஒரு உண்மையான நண்பன் தன் நண்பனின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, இப்படிப்பட்ட வேலை தவறு என்று சொல்லும் விதத்தை போன்று அவர் செயல்படுகிறார். இதை செய்யாதீர்கள், இல்லையேல் அதற்கான தண்டனையை நீங்கள் சந்திக்க நேரிடும் என சனி தேவன் எச்சரிக்கிறார்.
உண்மை கசக்கும் என பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். “हितं मनोहारी च दुर्लभ वच” என்றால் நன்மை தரும் வார்த்தைகள் எப்போதுமே இனிமையாக இருக்காது என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. நமது குறைகளை எந்தத் தயக்கமும் இன்றித் தெளிவாகச் சொல்லுபவர் தான் உண்மையான நண்பன் என்று கருத முடியும். அதேபோல, புனித கபீர்தாஸ் அவர்களும் “निंदक नियरे राखिए, आंगन कुटी छवाये” என்கிறார். அப்படி என்றால், ஒருவர் தனது குறைகளை உணர்ந்து கொள்ள, தன்னை விமர்சனம் செய்பவரை எப்போதும் தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தனது குறைபாடினை கண்டறிந்து அதனை நீக்கலாம் என்கிறார்.
சனி தேவனும் இப்படித்தான், உங்கள் செயல்களுக்கு ஏற்ப பலன் தருகிறார். கர்மங்களுக்கு ஏற்பட பலன்களை அனுபவிக்க செய்கிறார். சனிபகவானின் எச்சரிக்கையை புரிந்துகொண்டு, நீங்கள் முன்னேறவில்லை என்றால், அவர் தண்டனை கொடுத்தும் சரி செய்கிறார். சனி திசை, ஏழரை நாட்டு சனி, என எதுவாக இருந்தாலும், கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன் கிடைக்க தொடங்கும். மற்றவர்களை சமமாக நடத்தாமல் இருப்பது சனிக்கு பிடிக்காது. எல்லோரையும் சமமாகப் பார்த்து நியாயம் நடப்பவர்களைக் கண்டால் சனி மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்.
மேலும் படிக்க | சனி அஸ்தமனம்: மார்ச் 6 வரை இந்த ராசிகளுக்கு சோதனை காலம், சூதானமா இருங்க!!
சனிபகவானின் அருளைப் பெறவும், சனி பகவானின் செல்ல பிள்ளையாக இருக்கவும், சனி மகாதசையின் போது ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்கவும், ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் அல்லது ஏழரை நாட்டு சனி உள்ளவர்கள் பாதிப்புகளை தவிர்க்கவும், மேற்கொள்ள வேண்டிய சில பரிகாரங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்:
அமாவாசை அன்று நதியில் நீராடினால் சனி தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். இத்துடன் அனைத்து துன்பங்களும், பிரச்சனைகளும், தடைகளும் நீங்கி விடும். அதிலும் சனிக்கிழமை அன்று வரும் அமாவாசை இந்த பரிகாரத்திற்கு மிகவும் சிறந்தது.
ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யுங்கள். அவருக்கு உணவு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை தானம் செய்யுங்கள். இது சனி பகவானை மகிழ்விக்கிறது. இது தவிர கருப்பு எள், கருப்பு வஸ்திரம் தானம் செய்வதும் நல்லது.
சனி தோஷம் நீங்க, உளுந்து, கறுப்பு எள், இரும்பு ஆகியவற்றை கருப்பு துணியில் நனைத்து எண்ணெயில் தோய்த்து, சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். இது நிவாரணம் தரும்.
சனி பகவானின் சாலிசாவைப் பாராயணம் செய்யுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி சாலிசா, சனி ஸ்தோத்திரம் அல்லது சனி தசரத்கிருத ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது நல்லது.
மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கும் சோமாவதி அமாவாசை! விரதம் அனுஷ்டிக்கும் முறை!
மேலும் படிக்க | வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு-சாண்டள தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ