அரசாளும் யோகத்துடன் பிறக்கும் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன?

Luckiest Zodiac Signs: ஜோதிட ரீதியாக, சிலர் மிக அதிர்ஷ்டசாலிகளாகவும் சில துரதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள். அதிர்ஷ்டசாலிகளுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 7, 2024, 02:48 PM IST
  • ஜோதிட சாஸ்திரத்தின் படி கடக ராசிக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள்.
  • இவர்கள் எடுத்த பணிகள் அனைத்திலும் வெற்றி பெறுகிறார்கள்.
  • இவர்களும் சிறிது உணர்ச்சிவசப்படும் சுபாவம் கொண்டவர்கள்.
அரசாளும் யோகத்துடன் பிறக்கும் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன? title=

Luckiest Zodiac Signs: ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகளை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பும், வித்தியாசமான குணாதிசயங்களும், பழக்க வழக்கங்களும் இருக்கும். அனைத்து ராசிக்காரர்களும் அவர்களுக்கான அதிர்ஷ்டத்துடன் பிறந்திருக்கிறார்கள். இருப்பினும், இந்த அதிர்ஷ்டத்தை தங்களது சொந்த முயற்சியால் அனைவராலும் அதிகரித்துக்கொள்ள முடியும். 

ஒருவரது செயல்கள் மற்றும் அவர்களின் முயற்சிகளின் அடிப்படையில் அவர்களது எதிர்காலம் உருவாகின்றது. எனினும், ஜோதிட ரீதியான சில அம்சங்களுக்கும் இதில் முக்கிய பங்களிப்பு உள்ளது. அவற்றின் அடிப்படையில், அவர்களது வாழ்வில் பல முக்கிய நிகழ்வுகள் நடக்கும். சிலருக்கு எந்த வித முயற்சியும் எடுக்காமல், அதிக சிரமப்படாமல் நல்ல பலன்களும் மகிழ்ச்சியும் வாழ்வில் கிட்டும். ஆனால், சிலருக்கோ எவ்வளவு உழைத்தாலும், அந்த உழைப்புக்கான பலன் கிடைக்காது. இவர்கள் கடினமாக உழைத்தாலும் வெற்றி கிடைப்பதில்லை. 

இதன் காரணமாக சிலர் மிக அதிர்ஷ்டசாலிகளாகவும் சில துரதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பார்கள். அதிர்ஷ்டசாலிகளுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. இவர்கள் அனைத்து வித வெற்றிகளையும் காண்பார்கள். சமூகத்தில் இவர்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் பணம், அன்பு, வெற்றி போன்றவற்றில் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறார்கள். ஜோதிட ரீதியாக, இயற்கையாகவே அதிக அதிர்ஷ்டத்துடன் இருக்கும் ராசிகளை (Zodiac Sign) பற்றி இந்த பதிவில் காணலாம். 

ரிஷபம் (Taurus):

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், அன்பு, அழகு மற்றும் கவர்ச்சி ஆகியவற்றின் காரணி கிரகமாக இருக்கிறார். இவர்கள் அதிகப்படியான பண வரவையும் ஆடம்பரமான வாழ்க்கையையும் அனுபவிக்கிறார்கள். வாழ்வில் அதிக மகிழ்சியை பெறுகிறார்கள். ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார்கள். அதிக புகழையும் மதிப்பையும் பெறும் இவர்களின் ஆளுமை அனைவரையும் கவர்கிறது. சினிமா, சீரியல், போன்ற துறைகளில் இவர்கள் அதிகம் புகழ் பெறுவார்கள். 

கடகம் (Cancer):

ஜோதிட சாஸ்திரத்தின் படி கடக ராசிக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள். இவர்கள் எடுத்த பணிகள் அனைத்திலும் வெற்றி பெறுகிறார்கள். இவர்களும் சிறிது உணர்ச்சிவசப்படும் சுபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு வாழ்நாளில் எப்போதும் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். 

சிம்மம் (Leo):

சிம்ம ராசியின் அதிபதி சூரியன். சிம்ம ராசிக்காரர்கள் தலைமைத் திறன் மற்றும் தன்னம்பிக்கையுடன் பிறந்தவர்கள். அவர்கள் வேகமான முன்னேற்றத்தை அனுப்பவிக்கிறார்கள். எங்கு சென்றாலும் இவர்களுக்கு பிரபலமும் வெற்றியும் கிடைக்கும். தங்கள் அறிவு மற்றும் புரிதலால் இவர்கள் அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக சமாளித்து தீர்க்கிறார்கள். இவர்கள் பெரும் புகழைப் பெற்று நல்ல தலைவர்களாக மாறுகிறார்கள்.

மேலும் படிக்க | அட்சய திருதியை 2024: உங்கள் ராசிப்படி என்ன பொருள் வாங்கலாம்

துலாம் (Libra):

துலா ராசியின் அதிபதியும் சுக்கிரன்தான். அதிக அதிர்ஷ்ட ராசிகளில் ஒன்றாக துலா ராசி கருதப்படுகின்றது. இவர்களின் அதிர்ஷ்டம் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். மொத்தத்தில் அவர்கள் நல்ல வாழ்க்கையை அனுபவிப்பார்கள். பெரும்பாலும் இவர்கள் 40 வயதிற்குப் பிறகு, ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

தனுசு (Sagittarius):

மகிழ்ச்சியையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தருபவரான குருவின் ஆசிகள் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்போதும் இருக்கும். குருவின் அருளால் இந்த ராசிக்காரர்கள் செல்வச் செழிப்புடன் இருப்பார்கள். எந்தத் துறையில் நுழைந்தாலும் இவர்கள் வெற்றி அடைகிறார்கள். முதலாவதாக, இவ்ரகள் குறைந்த அளவிலான பிரச்சனைகளையே எதிர்கொள்கிறார்கள். மேலும் இவர்கள் தங்கள் வாழ்வில் பிரச்சினைகள் எழுந்தாலும், அவற்றை விரைவாக தீர்த்து விடுகிறார்கள். 

மீனம் (Pisces):

மீனத்தின் அதிபதியும் குருதான். குரு அருள் இருப்பதால் மீன ராசிக்காரர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுஇறார்கள். இவர்கள் அற்புதமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். வாழ்வில் அளவுக்கடங்கா பணம், செல்வம், அறிவு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறுகிறார்கள். தாம்பத்திய சுகம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றில் இவர்களுக்கு எந்த தடையும் இருப்பதில்லை. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மேஷத்தில் புதன் பெயர்ச்சி... வைகாசியில் பட்டையை கிளப்பப் போகும் ராசிகள் இவை தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News