சித்தயோகம்... இன்றைய அதிர்ஷ்ட ராசிகளும் சில பரிகாரங்களும்

Lucky zodiacs of March 4th, 2024: நாளை திங்கட்கிழமை மார்ச் 4ஆம் தேதி, சந்திரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். இந்த நன்னாளில், சித்தயோகம், ருச்சக யோகம் ஆகியவை கூடி வருகிறது. இதனால் சில ராசிக்காரர்கள், பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றி, சகல விதமான தடைகளையும் கடந்து, வெற்றி பெறுவார்கள் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 4, 2024, 01:36 PM IST
  • ஆன்மீகத்தின் மீதான நாட்டம் அதிகரிக்கும்.
  • வேலையில் இருப்பவர்கள், தொழிலில் ஈடுபட்டவர்கள் வெற்றிகளை அடைவார்கள்.
  • போட்டியாளர்களின் சதியை முறியடித்து, இலக்கினை அடைவார்கள்.
சித்தயோகம்... இன்றைய அதிர்ஷ்ட ராசிகளும் சில பரிகாரங்களும் title=

Lucky zodiacs of March 4th, 2024: நாளை திங்கட்கிழமை மார்ச் 4ஆம் தேதி, சந்திரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். மாசி மாத கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியுடன், கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய நன்னாளில், சித்தயோகம், ருச்சக யோகம் ஆகியவை கூடி வருகிறது. இதனால் சில ராசிக்காரர்கள், பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றி, சகல விதமான தடைகளையும் கடந்து, வெற்றி பெறுவார்கள் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர் . அந்த வகையில் மார்ச் மாதம் நான்காம் தேதியின் அதிர்ஷ்ட ராசிகளை அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

மேஷ ராசியினருக்கு மார்ச் மாதம் நான்காம் தேதி, நன்மையை அள்ளித் தரும் நாளாக இருக்கும். சிவபெருமானின் அருளால், எதிர்பாராத வகையில் வேலைகள் அனைத்தும், சிறப்பாக நிறைவேறி மனதிற்கு திருப்தியைக் கொடுக்கும். பக்க வருமானத்திற்கான யோசனைகள் மனதில் தோன்றும். இதனால் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள். குடும்பத்தில் இணக்கம் நிலவும்.

சிம்ம ராசி

சிம்ம ராசிகளுக்கு மார்ச் மாதம் நான்காம் தேதி நன்மைகளை அள்ளித் தரும் நாளாக இருக்கும். சிவபெருமானின் அருளால், பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆன்மீகத்தின் மீதான நாட்டம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்கள், தொழிலில் ஈடுபட்டவர்கள் வெற்றிகளை அடைவார்கள். போட்டியாளர்களின் சதியை முறியடித்து, இலக்கினை அடைவார்கள். திருமணம் குறித்த நல்ல செய்தி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

மேலும் படிக்க | குரு கேது நவபஞ்சம யோகம்: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, லாபம், பண வரவு

விருச்சிக ராசி

விருச்சிக ராசியினருக்கு மார்ச் மாதம் நான்காம் தேதி, அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் நாளாக இருக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் ஆளுமையினால், காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு ராசி

தனுசு ராசியினருக்கு மார்ச் மாதம் நான்காம் தேதி மங்களங்களை அள்ளித் தரும் நாளாக இருக்கும். பொறுப்புகளை தன்னம்பிக்கையுடன் நிறைவேற்றி வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் செல்ல தொடங்குவார்கள். புதுமையான யோசனைகளால் வருமானம் பெருகும். ஆடம்பர பொருட்கள் வாங்க பணத்தை செலவழிப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு, திருமணம் கைகூடுவதற்கான வாய்ப்பு உருவாகும்.

கும்ப ராசி

கும்ப ராசியினருக்கு மார்ச் மாதம் நான்காம் தேதி, நன்மைகளை அள்ளித் தரும் நாளாக இருக்கும். சிவபெருமானின் அருளால், வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கி நினைத்த காரியம் கைகூடும்.. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முதலீடுகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் வேலை திறனால் மதிப்பும் மரியாதையும் கூடும். பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றி, அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.

திங்கட்கிழமை காண பரிகாரங்கள்

அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று பால் அபிஷேகம் செய்வது, சுப பலன்களை கொடுக்கும். சிவபெருமானுக்கு, தேன் நெய், பால் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வதும், திங்கட்கிழமை விரதம் இருப்பதும், மனதின் ஆசைகள் விருப்பங்கள் நிறைவேற உதவும். சிவபெருமானுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்வது காரியத்தில் வெற்றியைக் கொடுக்கும். சிவபெருமானை மனதில் நினைத்து மகா மிருதய மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது பலன் அளிக்கும். தடைகள் நீங்க சிவபெருமானுக்கு ருத்ராட்சத்தினால் அர்ச்சனை செய்யலாம்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு இன்று மகிழ்ச்சியான நாள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News