)
Sani Vakra Peyarchi Palangal 2024: ஜோதிடத்தில், கிரகங்களின் ராசிகள் மற்றும் நட்சத்திரங்களில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு அதன் சுப மற்றும் அசுப பலன்கள் தாக்கம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு கர்ம பலன்களைத் தரும் சனி பகவான் தனது ராசியை மாற்றாமல் ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் இருப்பார். ஆனால் ஜூன் 29, 2024 அன்று இரவு 11:49 மணிக்கு சனி கிரகம் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்து நவம்பர் 15 வரை இந்த நிலையில் தான் பயணிப்பார். ஜூன் மாதத்தில் சனியின் வக்ர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சனியின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும், பொற்காலம் துவங்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...
மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சியால் மிகுந்த நன்மை அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றி பெறும். குடும்பத்துடன் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வீர்கள். பொருளாதார நிலை மேம்படும். புதிய தொழில் தொடங்க நல்ல வாய்ப்புகள் அமையும். தொழிலில் அதிக லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பிரச்சனைகள் தீரும்.
விருச்சிகம் (Scorpio Zodiac Sign): விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள். புதிய வருமானம் மூலம் நிதி ஆதாயம் உண்டாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். உறவுகளில் இருந்த கசப்புகள் அனைத்தும் நீங்கும். ஆண்டின் இறுதியில், சனி பகவான் உங்களின் வாழ்க்கையின் அனைத்து கஷ்டங்களையும் நீக்குவார். இந்த நேரத்தில் நீங்கள் சில புதிய வேலைகளைத் தொடங்கலாம், அதில் நீங்கள் வெற்றியைப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு இருக்கும். அரசியலுடன் தொடர்புடையவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்கள். அரசாங்கத்தில் உயர் பதவி கிடைக்கலாம்.
கும்பம் (Aquarius Zodiac Sign): ஜூன் 30 நிகழப் போகும் சனி வக்ர பெயர்ச்சிக்கு பிறகு கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக பொருளாதார நிலை வலுவாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது மதிப்பீட்டிற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சம்பள உயர்வை பெறலாம். ஆற்றலும் நம்பிக்கையும் அதிகரிக்கும். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வருமானத்தை அதிகரிக்க புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடித் தானாகவே அமையும். ஒவ்வொரு செயலிலும் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். வீடு, வாகனம், மனை, கடை வாங்க கடன் கிடைக்காதவர்களுக்கு இப்போது எளிதில் கடன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ