செம்பு இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் உலோகமாகும். தாமிரம் பல ஜோதிட பலன்களையும் கொண்டுள்ளது. இந்து சனாதன தர்மத்தில் அனைத்து உலோகங்களுக்கும் சில விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் இது அனைத்து எதிர்மறை ஆற்றல்களையும் உங்களிடமிருந்து விலக்கி, உங்களை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். அதே போல, நீங்களும் எந்த ஒரு உலோகத்தையும் அணிவதற்கும் முன்பு அதற்கான சனாதான விதிகளை தெரிந்து கொண்டு அணிவது நல்லது. சில ராசிக்காரர்கள் சில வகையான அணிகளைகளை அணிவது நல்லது இல்லை. தங்கம், வெள்ளி மற்றும் செம்பு உலோகத்தை அணிய வேண்டும் என்றால், முதலில் அவற்றின் விதிகள் பற்றிய தெரிந்து கொள்வது நல்லது.
மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு குபேர யோகம்... அட்டகாசமான பண வரவு
ஒவ்வொரு உலோகத்தைப் பற்றிய தகவல்கள் ஜோதிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சனாதன தர்மத்தில் செம்பு ஒரு மங்களகரமான உலோகமாகக் கருதப்படுகிறது. பொதுவாக தாமிரத்தில் நெருப்புத் தனிமத்தின் அளவு அதிகம். தாமிரம் ஆனது சூரியனுக்கும் செவ்வாய்க்கும் தொடர்புடையது. செப்பு உலோகம் குறிப்பாக வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறது. மேஷ ராசியின் அதிபதியாக செவ்வாய் உள்ளது. செவ்வாய் கிரகத்தை வலுப்படுத்த அனுமனை வழிபடுவது வழக்கம். இந்த ராசிக்காரர்கள் தாமிரத்தை அணிவது நன்மைகளை அள்ளி தரும். அதே போல சிம்ம ராசிக்காரர்களுக்கும் தாமிரம் மங்களகரமானது. இந்த ராசிக்காரர்கள் செப்பு அணிகலன்களை அணிவதால் மரியாதை அதிகரிக்கும்.
தனுசு ராசியின் அதிபதியாக வியாழன் உள்ளார். இந்த ராசிக்காரர்களின் இயல்பு விளையாட்டுத்தனமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் செப்பு அணிகலன்களை அணிவது நல்லது. மேற்கூறிய மூன்று ராசிக்கார்கள் தவிர பிற ராசிக்காரர்கள் செம்பு அணியக்கூடாது. தாமிரம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் நல்லது இல்லை. எனவே, சில ராசிக்காரர்களுக்கு செம்பு அணிவது பலன் தராது. ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிக்காரர்கள் கநடிப்பாக செம்பு அணியக் கூடாது. இது அவர்களது வாழ்க்கையில் சாதகமற்ற பலனைத் தரக்கூடியது.
செப்பு மோதிரம் அணிவதால் ஏற்படும் ஆன்மீக பலன்கள்:
தாமிரம் ஆனது உடலில் உள்ள நோய்களை குணப்படுத்தும் மந்திர பண்புகளைக் கொண்டுள்ளது. சூனியம் போன்ற செய்வினைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கிறது. செப்பு மோதிரங்கள் அணிவதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பற்களுக்கு நன்மை பயக்கும். குறிப்பாக எதிர்மறை ஆற்றலில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. நமது கவலை மற்றும் கோபத்தை கட்டுப்படுத்துகிறது. உங்கள் ஜாதகத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் பலவீனமான நிலையில் இருக்கும்போது, தாமிர மோதிரம் மூலம் அவற்றின் தீங்குகளைத் தவிர்க்கலாம். செப்பு வளையங்கள் உங்கள் சுயமரியாதையை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளை இனி அசைச்சுக்க முடியாது..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ