55 ரன்களில் இலங்கை காலி... ஷமி, சிராஜ் விக்கெட் வேட்டை - அரையிறுதியில் இந்தியா!

IND vs SL Highlights: நடப்பு உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இலங்கை அணியை 55 ரன்களில் ஆல்-அவுட்டாக்கி 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 2, 2023, 09:06 PM IST
  • ஷமி நடப்பு தொடரில் 2ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • முகமது ஷமி ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
  • இந்திய அணிக்கு உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டை வீழ்த்திய பெருமையையும் ஷமி பெற்றார்.
55 ரன்களில் இலங்கை காலி... ஷமி, சிராஜ் விக்கெட் வேட்டை - அரையிறுதியில் இந்தியா! title=

IND vs SL Highlights: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) 33ஆவது லீக் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதில் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 357 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சுப்மான் கில் 92 ரன்களையும், விராட் கோலி 88 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும் எடுத்தனர். இலங்கை அணி பந்துவீச்சில் மதுஷங்கா 5 விக்கெட்டுகளையும், சமீரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இலங்கை அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பும்ரா முதல் ஓவரிலேயே பதும் நிசங்கா டக்அவுட்டானார். தொடர்ந்து, இரண்டாவது ஓவரில் சிராஜ் கருணாரத்னே, சதீரா சமரவிக்ரமா ஆகியோர் டக்அவுட்டானார். சிராஜ் வீசிய நான்காவது ஓவரில் குசால் மெண்டிஸ் 1 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, 9ஆவது ஓவரில் ஷமி பந்துவீச வந்தார். 

மேலும் படிக்க | அப்போ சச்சின்... இப்போ விராட் - இது 2003 ஸ்கிரிப்ட் ஆச்சே - அப்போ இந்தியாவுக்கு கப் இல்லையா...!

அந்த ஓவரில் அசலங்கா, ஹேமந்தா ஆகியோர் அவுட்டாக, 11ஆவது ஓவரில் சமீராவை ஷமி விக்கெட் எடுத்தார். தொடர்ந்து, 13ஆவது ஓவரில் மேத்யூஸையும், 18ஆவது ஓவரில் ரஜிதாவையும் ஷமி அவுட்டாக்கி தொடரில் இரண்டாவது முறையாக 5 விக்கெட்டை ஹாலை பதிவு செய்தார். மேலும், உலகக் கோப்பை தொடரில் இது ஷமியின் 3ஆவது 5 விக்கெட் ஹால். 

அதுமட்டுமின்றி, இந்திய அணி சார்பில் உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் ஷமி படைத்தார். கடைசி விக்கெட்டாக மதுஷங்காவை ஜடேஜா விக்கெட் எடுத்தார். அதன்மூலம், 19.4 ஓவர்களில் 55 ரன்களுக்கு இலங்கை ஆல்-அவுட்டானது. இந்திய பந்துவீச்சில் ஷமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதன்மூலம், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. மேலும், இந்திய அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மட்டுமே உள்ளது. தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகளுடன் இந்தியாவுக்கு போட்டி உள்ளது. இலங்கை அணி அரையிறுதி ரேஸில் இருந்து வெளியேறியது. மேலும், இந்திய அணி முதலிடத்தில் முன்னேறியது.  

மேலும் படிக்க | ஒரே போட்டியில் சச்சின் சாதனையை ஊதி தள்ளிய விராட்.. இன்னும் லிஸ்ட் இருக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News