#INDvSA முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்

தென் ஆப்பிரிக்கா சுற்று பயணம் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் என தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளது.

Last Updated : Jan 5, 2018, 01:46 PM IST
#INDvSA முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் title=

தென் ஆப்பிரிக்கா சுற்று பயணம் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் என தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி இதுவரை தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. ஒரே ஒருமுறை முன்னால் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி தொடரை சமன் செய்துள்ளது. இம்முறையாவது வரலாறு படைக்குமா? விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். 

இந்நிலையில், இன்று முதல் டெஸ்ட் போட்டி 2 மணி அளவில் தொடங்க உள்ளது. டாஸ் வென்ற  தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

 
இந்தியா அணி: விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், ஷிகர் தவண், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, விருத்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், மொகமது ஷமி, இஷாந்த் சர்மா

தென் ஆப்பிரிக்கா அணி: டுபிளெஸ்ஸிஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, டீன் எல்கர், குயிண்டன் டி காக், ஏ.பி.டிவில்லியர்ஸ், கேஷவ் மகராஜ், மோர்னே மோர்கெல், கிறிஸ் மோரிஸ், ஆண்டில் பெலுக்வயோ, பிலாண்டர், ககிசோ ரபாடா, ஐடன் மார்க்ராம், வெர்னான் பிலாண்டர்,

Trending News