ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகின்றது.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் முடிவுற்ற டெஸ்ட் தொடரில் இருஅணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளது.
இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் எனப்படும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 26) மெல்பர்ன் மைதானத்தில் அதிகாலை துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல், முரளி விஜய் இருவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டதால், அவர்களுக்கு பதிலாக மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
மயங்க் அகர்வாலுக்கு முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி ஆகும். தனது முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கிய மயங்க் அகர்வால், நிதானமாக ஆடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை அருமையாக எதிர்கொண்டார். முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியிலேயே தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அவர்
இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் ஸ்கோர் 40 ரன்கள் எடுத்திருந்த போது, ஹனுமா விஹாரி 8(66) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த சேதுஷ்வர் புஜாரா மற்றும் மயங்க் அகர்வால் இணைந்து ஆடினர். ஒரு கட்டத்தில் நன்றாக ஆடி வந்த மயங்க் அகர்வால் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். மயங்க் அகர்வால் 76(161) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிச்சர் அடங்கும்.
இதன்மூலம் சர்வேதே டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரை சதத்தை அடித்துள்ளார். முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்தார். மயங்க் அகர்வால் 76(161) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 27 வயதான மயங்க் அகர்வால் தனது பேட்டிங் திறமையால் இந்திய அணிக்கு ஒரு நல்ல தொடக்க வீரர் கிடைத்து விட்டார் என்பதை முதல் போட்டியிலேயே உணர்த்திவிட்டார்.
Fifty on Test debut for @mayankcricket #TeamIndia #AUSvIND pic.twitter.com/zpJijgerzT
— BCCI (@BCCI) December 26, 2018