’எனக்கு எதுக்குப்பா மேன் ஆப் தி மேட்ச் கொடுத்தீங்க’ கே.எல்.ராகுல் கேள்வியால் திகைத்த தொகுப்பாளர்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியின் முடிவில் மேன் ஆப்தி மேட்ச் கொடுத்தபோது, தான் இதற்கு தகுதியானவர் இல்லை என கே.எல்.ராகுல் ஓபனாக பேசினார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 3, 2022, 12:49 PM IST
  • கே.எல்.ராகுலுக்கு மேன் ஆப்தி மேட்ச்
  • அதிருப்தி தெரிவித்த ராகுல்
  • சூர்யகுமார் தகுதியானவர் என விளக்கம்
’எனக்கு எதுக்குப்பா மேன் ஆப் தி மேட்ச் கொடுத்தீங்க’ கே.எல்.ராகுல் கேள்வியால் திகைத்த தொகுப்பாளர் title=

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது 20 ஓவர் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இந்திய அணி வெற்றி பெற்றாலும், இரண்டு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு அதிரடி வாணவேடிக்கைகளை காட்டியது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில், ரோகித் சர்மாவும், கே.எல் ராகுல் அதிரடியை தொடங்கி வைத்தனர். இருவரும் மாறி மாறி விளாச திகைத்த தென்னாப்பிரிக்க பவுலர்கள், எப்படியாவது விக்கெட்டை எடுக்க வேண்டும் என பகீரத முயற்சியில் இறங்கினர். அவர்களின் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்காமல் இல்லை. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, 43 ரன்களில் தனது விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறினார். 

மேலும் படிக்க | T20 World Cup: பும்ரா விலகல்-னு யாரு சொன்னா? டிராவிட் கொடுத்த மெகா அப்டேட்

இனிமேல் இந்தியாவின் ஸ்கோர் மெல்ல குறையும் என எதிர்பார்த்த தென்னாப்பிரிக்காவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவருக்கு பிறகு களமிறங்கிய விராட் கோலி, ராகுலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியை தொடர்ந்தார். இந்த ஜோடியின் ஆட்டம் நன்றாக இருக்கிறதே என யோசிக்கும்போது ராகுல் 28 பந்துகளில் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இப்போதாவது, இந்திய அணியின் ரன்வேட்டை குறையும் எதிர்பார்த்து கொண்டிருந்த தென்னாப்பிரிக்கா வீரர்களுக்கு, அதிர்ச்சியை கொடுத்தார் சூர்யகுமார் யாதவ். களமிறங்கியது முதல் பந்துகளை நாலாபுறமும் சிதறடிக்க, எப்படி பந்துவீசுவது என்றே தெரியாமல் திக்குமுக்காடினர் தென்னாப்பிரிக்க பவுலர். முடிவில் 22 பந்துகளில் 61 ரன்கள் விளாசி வெளியேறினார் சூர்யகுமார் யாதவ். 

கடைசி வரை களத்தில் இருந்த கோலி 49 ரன்களும், தினேஷ் கார்த்திக் 7 பந்துகளில் 17 ரன்கள் எடுக்க இந்தியா 237 ரன்கள் குவித்தது. பின்னர் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், மில்லர் அதிரடியில் இந்திய அணி மிரண்டது. சூப்பராக விளையாடி அவர் சதமடிக்க, மறுமுனையில் டிகாக் அரைசதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். அவர்களின் ஆட்டம் அதிரடியாக இருந்தபோதும் அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல முடியவில்லை. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை பெற்று தொடரையும் கைப்பற்றியது. இங்கு தான் டிவிஸ்டே இருந்தது. மேன் ஆப்தி மேட்ச் சூர்யகுமார் யாதவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கே.எல்.ராகுலுக்கு கொடுக்கப்பட்டது. 

இதனை அவரே நம்பவில்லை. பின்னர், போடியம் பகுதிக்கு சென்று விருதை பெற்றுக் கொண்ட அவர், இந்த விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை, சூர்யகுமார் யாதவுக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என வெளிப்படையாக பேசிவிட்டார். 

மேலும் படிக்க |இந்திய அணி அறிவிப்பு : ஷிகர் தவான் கேப்டன்... முகேஷ் குமார் அறிமுகம் - யார் இவர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News