மத்திய அரசு மீது கை வைத்தால் நிம்மதியாக இருக்க முடியாது - ஆர்.பி.உதயகுமார்!

மத்திய அரசு மீது கை வைத்தவர்கள் எவனும் நிம்மதியாக இந்த நாட்டிலே வாழ்ந்த்தாக சரித்திரம் இல்லை என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை விடுத்தார்.  

Written by - RK Spark | Last Updated : May 31, 2023, 09:34 AM IST
  • செந்தில் பாலாஜிக்கு யார் இவ்வளவு தைரியம் கொடுத்தது.
  • மத்திய அரசு யாரையும் சும்மா விடாது.
  • மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.
மத்திய அரசு மீது கை வைத்தால் நிம்மதியாக இருக்க முடியாது - ஆர்.பி.உதயகுமார்! title=

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அ .புதுப்பட்டியில் அதிமுக கழக அம்மா பேரவை சார்பில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தமிழ்ழகன் தலைமையில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமாருக்கு அதிமுக கட்சி நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்பளித்தனர். தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு அ.புதுப்பட்டியில்  ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தொடங்கி வைத்தார்.  அதற்கு முன்னதாக பேசிய ஆர். பி. உதயகுமார், திமுக வை பொறுத்தவரையில் முதல்வர் ஜப்பான் சென்று இன்ப சுற்றுலாவாக தனிவிமானத்தில் செல்கிறார். எங்க முதலமைச்சர் எடப்பாடியார் பொது விமானத்தில் தான் போனார். 

மேலும் படிக்க | குடித்துவிட்டு பெண் போலீஸை தாக்கிய பா.ஜ.க நிர்வாகியின் மகன்-தொடர் சர்ச்சையில் சசிகலா

10 ஆண்டுகள் அம்மாவின் அரசில் எடப்பாடியார் ஆட்சில் தமிழ்நாட்டில் எந்த கிராமத்திலாவது எந்த இடந்த இடத்திலாவது யாரவது கள்ளச சாராய மதுவினால் உயிரிழந்தார் என்ற வரலாறு கிடையாது. ஆனால் இன்றைய மதுவிலக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் தனது மானிய கோரிக்கையில் கடந்த 13 ஆண்டுகளில் கள்ளசாராய சாவு என்பது தமிழகத்தில் இல்லை என்று மானியக் கோரிக்கையில் சட்டசபையில் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.  ஆனால் இரண்டு ஆண்டு காலத்தில் இதுவரை மது குடித்து இறந்தவர்கள் புள்ளிவிபரம் என்னவென்று தெரியவில்லை. சொத்துக்களை இன்றைக்கு சட்டவிரோத பரிமாற்றமாக வரிஏய்ப்பு செய்பவர்கள், உழைப்புக்கு அதிகமாக செத்துகளை வைத்திருப்பவர்கள், வருமானத்திற்கு அதிகமாக செத்துகளை சேர்ப்பவர்களுக்கு வருமான வரித்துறை ஆதாரங்களை எடுத்து அவர்களின் வீட்டில் சோதனை செய்யும். அதில் தொழில் அதிபர்கள், சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள், அரசியல்கட்சி தலைவர்கள் என அனைவரும் இருப்பார்கள்.

75 ஆண்டுகளில் பல முறை வருமான வரித்துறை சோதனை எல்லா இடத்திற்கும் சென்றதாகவும் சில இடத்தில் மறைத்து வைத்து இருப்பார்கள் கேட்டதை கொடுக்காமல் இருப்பார்கள் என்றும் ஒத்துழைப்பு கொடுத்திருப்பார்கள் அல்லது கொடுக்காமல் இருந்திருப்பார்கள். ஆனால் 75 ஆண்டுகளில் வருமான வரித்துறைக்கு சென்றவர்கள் கையை அடித்து கால்களை உடைத்து 4 பேரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்த்த கொடுமையான வரலாறு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை என்றும், இந்த தாய் தமிழ்நாட்டில் திமுக வில் சேர்ந்திருக்கிற செந்தில் பாலாஜி அமைச்சருக்கு இந்த தைரியம் வந்திருக்கிறது என்றால் சொன்னால் முதலமைச்சர் கொடுத்த தைரியம் என்பதை தவிர வேற ஒன்றும் இல்லை.  கை ஒடிந்த நிலையில் காயத்தி என்ற பெண் அதிகாரி விசாரணைக்கு சென்றுள்ளார் என்றும் அவர் மிகப்பெரிய விளையாட்டு வீராங்கனை என்றும் கூறினார்.

40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது, அதில் செந்தில் பாலாஜி தம்பி அசோக் வீட்டில் ஏன் விட வில்லை என்றால் கத்தை கத்தையாக பணம் இருந்துள்ளது. ஏன் என்றால் நீ சண்டை போடுவது போன்று சண்டை போடு  நீ அடிக்க மாதிரி அடி நான் கடத்துற மாதிரி கடத்துறேன் என்று கடத்திவிட்டதாகவும் இவன அடிக்கிற மாதிரி அடிடா என்றால் விசுவாசத்தை காட்டுவதற்காக உண்மையாகவே அடித்துவிட்டான் என்றும் மத்திய அரசு மீது கைவைத்தால் விடுவார்களா என்று செந்தில் பாலாஜி கேட்பதாகவும் ஏன் என்று கேட்டால் நீங்க தான் செல்லிதான் செய்ததாக கூறுவதாகவும் செய்திகள் வந்துள்ளது. மத்திய அரசு மீது கைவைத்தவர்கள் எவனும் நிம்மதியாக  இந்த நாட்டிலே வாழ்ந்த்தாக சரித்திரம் இல்லை என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று பேசினார்.  இதில் மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் துரை தனராஜ், மாவட்ட மாணவரணிச்செயலாளர் மகேந்திர பாண்டி, செல்லம்பட்டி ஒன்றியசெயலாளர் ராஜா, முன்னாள் எம்எல்ஏ பா.நீதிபதி, மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், நகரச்செயலாளர் பூமா ராஜா,வழக்கறிஞர் லட்சுமணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன், பெருமாள் ,ரகு, மூர்த்தி , சிவப்பு முருகன், முசிசோ முருகன் மற்றும் அதிமுகநிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | சென்னையில் திடீரென பேருந்துகள் நிறுத்தம்..! போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News