கர்ப்பிணிக்கு காவலர்கள் நடத்திய வளைகாப்பு... மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

மதுரை கள்ளிக்குடி காவல் நிலையத்தில் தாய் தந்தையை இழந்த கர்ப்பிணி பெண்ணுக்கு காவலர்கள் நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 30, 2024, 01:55 PM IST
  • காவலர்கள் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.
  • சங்கீதாவின் தாயார் மல்லிகாவும் உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்தார்.
  • காவலர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்ப்பிணிக்கு காவலர்கள் நடத்திய வளைகாப்பு... மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!! title=

மதுரை திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடி காவல் நிலையத்தில் தரவு நுழைவு உதவியாளராக பணிபுரியும் சங்கீதா இவரது தந்தை ஜோதிகரன் மதுரை திருநகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

இந்த நிலையில் ஐடியில் பணிபுரியும் ராஜா பிரபு என்பருடன் திருமணம் நடந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கீதாவின் தாயார் மல்லிகாவும் உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்தார். 

தற்போது சங்கீதா 7 மாதம் கர்ப்பமான நிலையில் வளகாப்பு நிகழ்ச்சி நடத்த பெற்றோர்கள் இல்லையே என கவலைப்பட்டுக் கொண்டிருந்ததை அறிந்த   காவலர்கள் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆய்வாளர் லட்சுமி லதா, சார்பாய்வாளர் ஜெயக்குமார் மற்றும் சக காவலர்கள் பங்கேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தேன். 

மேலும் படிகக் | ஜெயலலிதா ராமஜென்மபூமிக்கு கர சேவகர்களை அனுப்பியதாக கூறுவது முற்றிலும் பொய்: புகழேந்தி

வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த பெற்றோர்கள் இல்லையே என நினைத்துக் கொண்டிருந்த கர்ப்பிணிக்கு காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை கள்ளிக்குடி காவல் நிலையத்தில் தாய் தந்தையை இழந்த கர்ப்பிணி பெண்ணுக்கு காவலர்கள் நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் படிக்க | மீண்டும் சிறை செல்லும் டிடிஎப் வாசன்? பிணையில் வரமுடியாத படி வழக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News