இந்து விரோத தீயசக்திகளுக்கு தமிழக வாக்காளர்கள் மரண அடி; மிக்க நன்றி: எச்.ராஜா

தமிழக இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி உறுதியானது. இந்த வெற்றியை அடுத்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 24, 2019, 03:06 PM IST
இந்து விரோத தீயசக்திகளுக்கு தமிழக வாக்காளர்கள் மரண அடி; மிக்க நன்றி: எச்.ராஜா title=

சென்னை: கடந்த 21 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதிக்காண இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் சற்று தாமதமாக எண்ணப்பட்டன. தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். இதனைதொடர்ந்து நாங்குநேரி தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் வெ.நாராயணன் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த இரண்டு தொகுதியின் வெற்றியைக் குறித்து, எச்.ராஜா, இந்துக்களுக்கு தமிழக வாக்காளர்கள் தந்துள்ள தீபாவளி பரிசு. வாக்காளர்களுக்கு மிக்க நன்றி எனக் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பாக வெ.நாராயணனும், காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன் வேட்பாளராக களம் இறங்கினர். மூன்றாவது கட்சியாக நாம் தமிழர் கட்சி சார்பாக சா.ராஜநாராயணன் போட்டியிட்டார். காலை முதலே அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வந்தார். ஆரம்பத்தில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தவர், அடுத்தடுத்து சுற்று முடிந்த நிலையில், படிப்படியாக முன்னேறி சுமார் 32 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

இந்த இரண்டு தொகுதியிலும் அதிமுக-பாஜக கூட்டணியின் வெற்றியை பெற்றதை அடுத்து, தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டரில் பக்கத்தில் "நன்றி" தெரிவித்துள்ளார். அவர் கூறியது, "இடைத்தேர்தல் முடிவுகள் இந்துக்களுக்கு தமிழக வாக்காளர்கள் தந்துள்ள தீபாவளி பரிசு. வாக்காளர்களுக்கு மிக்க நன்றி.

 

மேலும் அவர் மற்றொரு டிவிட்டரில், "தமிழக இடைத்தேர்தலில் பகவத்கீதையையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் இழித்தும் பழித்தும் பேசிய திக, திமுக, காங்கிரஸ், மதிமுக,விசிக, இந்து விரோத தீயசக்திகளுக்கு தமிழக வாக்காளர்கள் மரண அடி" எனக் கூறியுள்ளார்.

 

நாடு முழுவதும் கடந்த 21 ஆ தேதி நடைபெற்ற 51 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், 2 மக்களை தொகுதிக்கான தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அதில் ஹரியானா மாநிலத்தில் யாரும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேபோல மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரை பாஜக-சிவசேனா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

Trending News