தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்தவர்கள் திமுக - எடப்பாடி பழனிசாமி!

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் மற்றும் அநீதி இழைத்தவர்கள் தான் இந்த திமுக வினர். அதிமுக மதத்திற்கும் சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி - எடப்பாடி பழனிசாமி!  

Written by - RK Spark | Last Updated : Sep 6, 2023, 08:10 AM IST
  • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது.
  • எங்கு பார்த்தாலும் விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு.
  • ல்லாத் துறைகளும் ஊழல் மலிந்துள்ளது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்தவர்கள் திமுக - எடப்பாடி பழனிசாமி! title=

கோவை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், கோவை மாநகர் மாவட்ட அதிமுக  செயலாளர் அம்மன் அர்ச்சுணன் மகன் கோபாலகிருஷ்ணன் உடல்நல குறைவால் இறந்து விட்டார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பதினருக்கு ஆறுதல் சொல்ல வந்துள்ளேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு இப்படி மக்களை வாட்டி வதைக்கும் சூழலில் மக்களை திசைதிருப்புவதற்காக சனாதன தர்மம் என்ன கூறி நாடகத்தை அரங்கேற்றி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். சனாதனம் பேசும் திமுக கடந்த காலத்தில் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் போட்டியிட்டபோது அவருக்கு எதிர்த்து ஓட்டு போட்டவர்கள் தான் திமுக. அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்ற நிலையில் எதிர்த்து வாக்களித்தவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

மேலும் படிக்க | ஆளுநரின் கையெழுத்துக்காக காத்திருக்கும் 49 சிறைவாசிகளின் விடுதலை

தற்போதைய ஜனாதிபதி திரௌபதி முருகன் போட்டியில் இன்று பொழுதும் எதிர்த்து ஓட்டு போட்டார்கள் இவரும் மலைவாழ் இனத்தைச் சார்ந்தவர், இவரையும் ஆதரிக்கவில்லை எதிர்த்து வாக்களித்தனர். இப்படி சனாதன தர்மத்தை பேசுகிறவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உயர்ந்த பதவியில் போட்டியிட்டவர்களை எதிர்த்து வாக்களித்தவர்கள்.  திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள ஆர்எஸ் பாரதி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருக்கும்பொழுது கருணாநிதி நீதி அரசர்கள் நியமித்தது குறித்து சில பதில்களை சொன்னார். அப்போது நீதிபதி பதவி என்பது நாங்கள் பிச்சை என கொச்சையாக பேசினர். தனபால் அவர்கள் சட்டப்பேரவை தலைவராக  நியமிக்கப்பட்டபோது அவரை இழிவுபடுத்தியவர்கள் தான் இன்றைய திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள். சட்டப்பேரவை தலைவராக தனபால் இருந்த பொழுது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை அந்த ஆசனத்தில் இருந்து கீழே இறக்கி எங்களோடு அமர வைத்து சட்டமன்ற விவாதத்தில் அவர் மீது பல்வேறு விமனம் செய்தது தான் இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு.

உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு என்று சொல்லி அதனைபேசு பொருளாக்கி வருகிறார். அவர் செய்த துரோக செயல்களால் தமிழகம் குட்டிச்சுவர் ஆகி இருக்கிறது. எல்லாத் துறைகளும் ஊழல் மலிந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் நான்கு பேர் துடிக்க துடிக்க வெட்டி கொலை செய்துள்ளனர். நேற்று மட்டும் தமிழகத்தில் ஒன்பது கொலைகள் நடந்துள்ளது. கொலை நடக்காத இடம் இல்லை. செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்களை திசை திருப்ப திமுக இந்த நாடகத்தை அரங்கேற்றி உள்ளது.பல்லடம் கொலை குற்ற சம்பவத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். யார் குற்றவாளிகள் என கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதிமுக குறித்து விமர்சிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு வயது போதவில்லை. அவர் என்ன சாதனை செய்துவிட்டார். திமுக அமைச்சராக பதவி  கொடுத்துள்ளனர் அவ்வளவுதான். கருணாநிதிக்கு பேரன் ஸ்டாலினுக்கு மகன் அது மட்டும் தான் அவருக்கு உள்ள தகுதி.அதை  வைத்துக்கொண்டு அனைத்தையும்  ஆட்டிப்படைக்க முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது.

உதயநிதிக்கு பிறகு இன்ப நிதி என்கிறார்கள். இது முற்றிலும் வாரிசு அரசியல் கட்சி. திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. கட்சி அல்ல.ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு என்பதை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.இந்தியாவிற்கே சூப்பர் முதலமைச்சர்  மற்றும் முதன்மையான  முதலமைச்சர் என கூறும் தமிழக முதலமைச்சர் தேர்தலை சந்திக்க  ஏன் அச்சப்படுகிறார்நல்லாட்சி நடத்துகிறேன் என்பவர் மக்களை சந்திக்க ஏன் பயப்படுகிறீர்கள்? ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழகத்தில் முதலமைச்சர் என்ன செய்துவிட்டார்? இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் என்ற சாதனையை செய்திருக்கிறார் சூப்பர் முதலமைச்சர். இரண்டரை ஆண்டுகளில் இரண்டு லட்சத்து 75 ஆயிரம் கோடி கடன் வாங்கி தமிழகத்தை கடனாளியாக்கி இருக்கிறார்.

மதுபானம், பத்திரப்பதிவு, ஜிஎஸ்டி, சாலை வரி ஆகியவற்றில் வருமானம் அதிகரித்துள்ளது. கடனும் அதிகரித்துள்ளது. ஆனால் திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. அப்படி இருக்கும்போது மோசமான திறமை இல்லாத பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். திறமையற்ற முதலமைச்சர் ஆட்சி செய்கின்ற காரணத்தால் திறமையான நிதி நிலையை கையாளாத  காரணத்தால் நிறைய திட்டங்கள் கிடப்பில் உள்ள  காட்சிகளை காண்கிறோம்.கொடநாடு வழக்கில் தன்மீதான  குற்றச்சாட்டுகள் என்பது சிந்துபாத் கதை போன்று தொடர்ந்து வருகிறது என்றார்.

மேலும் படிக்க | உதயநிதி அடித்த கிண்டலில் கடுப்பான சர்ச்சை சாமியாரின் ரியாக்ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News