காதலனுக்காக காவல் நிலையத்தில் காத்திருந்த காதலி: காதலனை கட்டிப்போட்ட சாதி

தமிழரசியும் அரவிந்தனும் கடந்த நான்கு ஆண்டுகளாக  ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் பற்றி இரு குடும்பத்தினருக்கும் தெரியும்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 18, 2024, 04:03 PM IST
  • காதலியை சாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த இளைஞர்
  • நள்ளிரவு 12மணிவரை பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் காத்திருப்பு
  • நடந்தது என்ன?
காதலனுக்காக காவல் நிலையத்தில் காத்திருந்த காதலி: காதலனை கட்டிப்போட்ட சாதி title=

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியை சேர்ந்தவர் பொன்முத்து(54). இவரது மனைவி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் தமிழரசி(26) கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ஐந்தாண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இதே நிறுவனத்தில் வண்டலூர் பகுதியை சேர்ந்த அருணகிரி என்பவரது மகன் அரவிந்தன் என்பவரும் பணியாற்றி வருகிறார்.

தமிழரசியும் அரவிந்தனும் கடந்த நான்கு ஆண்டுகளாக  ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் பற்றி இரு குடும்பத்தினருக்கும் தெரியும். தமிழரசி வீட்டுக்கு அரவிந்தன் வருவதும் அரவிந்தன் வீட்டுக்கு தமிழரசி செல்வதுமாய் இருந்து வந்துள்ளனர். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருதரப்பிலும் சம்மதம் தெரிவித்திருந்தனர்.

மேலும் படிக்க | தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்! உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி?

தற்போது தமிழரசியை திருமணம் செய்துகொள்ள அரவிந்தன் மறுத்துவருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழரசியின் அப்பா பொன்முத்து அர்விந்தனின் பெற்றேரிடம் கேட்டதற்கு நீங்கள் தாழ்த்தப்பட்ட சாதி என்பது எங்களுக்கு முன்பே தெரியாது. தற்போதுதான் நீங்கள் தாழ்த்தப்பட்ட சாதி என தெரியவந்தது. அதனால் எங்களுக்கும் உங்களுக்கும் சரிப்பட்டு வராது என கூறியுள்ளார். சாதியை காரணம் காட்டி அர்விந்தனுக்கும் தமிழரசிக்கும் திருமணம் செய்துவைக்க மறுத்து வருகின்றனர். 

அதனால் பாதிக்கப்பட்ட பெண் தமிழரசி இது குறித்து கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர்  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து தமிழரசி கூறும்போது, 'நானும் அரவிந்தனும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துளாளோம். நான் தாழ்த்தப்பட்ட சாதி என்பது அரவிந்தன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரியும். அவர்கள் என்னை உரிமையோடு மருமகளே என்றுதான் அழைப்பார்கள். இதுபோன்று எனக்கு நம்பிக்கை கொடுத்து ஆசையை வளர்த்துவிட்டு தற்போது சாதியை காட்டி எங்கள் திருமணத்திற்கு தடையாக இருக்கின்றனர். என்னை அரவிந்தனோடு திருமணம் செய்து வைக்கவேண்டும். இல்லையென்றால் எனது சாவிற்கு அரவிந்தன் குடும்பம்தான் காரணம் என எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன்' என்று  கண்ணீர் மல்க கூறினார். மாலை 7 மணிக்கு காவல்நிலையம் வந்தவர் இரவு 12 மணிவரை காவல்நிலையத்தில் தன்னந்தனியாக காத்துக்கிடந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது - முகஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

காதலியை சாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த இளைஞர்ப்பு..நள்ளிரவு 12மணிவரை பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் காத்திருப்பு

 

Trending News