கோவை மாவட்டம் சின்னியம்பாளையாத்தில் தேசிய கயிறு மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய சிறு, குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் நாராயண் ராணே கலந்து கொண்டார். அவருடன் மத்திய இணையமைச்சர் பாணுபிரதாப் வர்மா, தமிழக சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக, இந்த மாநாட்டில் கணபதி ஹோமம் பாடப்பட்டது.
மேலும் படிக்க | ஹெச்.ராஜா வெளியிட்ட புகைப்படம்! கலாய்க்கும் நெட்டிசன்கள்!
வழக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் தொடங்கும் நிலையில், இந்த விழாவில் கணபதி மந்திரம் பாடப்பட்டது. அப்போது மேடையில் இருந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அறிவுறுத்தினார். பாடலை இசைக்க அவர்கள் தயாரானபோது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இல்லை. பின்னர், பெண் ஒருவர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினார்.
இந்த நிகழ்வு நிகழ்ச்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய மத்திய தொழில்துறை அமைச்சர் நாராயண் ராணே, தனது உரையை முழுவதுமாக ஹிந்தியில் நிகழ்த்தினார். ஆங்கிலம் அல்லது தமிழில் மொழியாக்கம் செய்வதற்கு யாரும் நியமிக்கப்படாததால் அவருடைய பேச்சு அங்கிருந்தவர்களுக்கு புரியவில்லை. இதனால், செல்போன்களை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு கணபதி மந்திரம் இசைக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். இந்துக்களுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதா? என்ற கேள்விக்கு, கணபதி மந்திரத்தை இந்து பாடலாக பார்க்கக்கூடாது என கேட்டுக் கொண்டார். மாறாக, அதில் இருக்கும் விஷயங்களை கிரகித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் படிக்க | விக்னேஷ் லாக்கப் மரணமும் சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பும்
தமிழகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மொழியாக்கம் செய்வதற்குகூட ஒருவரை நியமிக்காமல் மத்திய அமைச்சர் இந்தியில் பேசியதும், விழாவில் தமிழ்த்தாய் முதலில் பாடப்படாமல் கணபதி மந்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலில் பாடப்பட்டதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்ற அரசாணை நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR