நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி தனது அரசியல் பயணத்தை ராமநாதபுரம் அப்துல்கலாம் அவர்களின் வீட்டில் இருந்து துவங்கினார். மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்ட மைதானத்தில் அவர் தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, கட்சியின் பெயரையும் அறிமுகம் செய்து வைத்தார். மக்கள் நீதி மய்யம் என்பது தான் கட்சியின் பெயர்.
நடிகரும் மக்கள் நீதி மைய்யம் தலைவருமான கமல்ஹாசன் ஊழலுக்கு எதிரான 'மையம் விசில் மொபைல் ஆப்' குறித்து பேசியிருந்தார். 'மய்யம் விசில்' என்ற புதிய செயலியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். தங்கள் பகுதியின் தொடர் தவறுகளை சொல்ல விரும்புவோர், அபாயச் சங்கு எனும் மய்யம் விசில் செயலியில் தெரிவிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அவர் அறிவித்தபடி, ஊழலுக்கு எதிரான இந்த 'மைய்யம் விசில்' செயலியை நேற்று மாலை 5 மணிக்கு அறிமுகம் செய்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மய்யம் விசில் செயலியை, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் பேசியது....!
மய்யம் விசில் செயலி என்பது பிரச்னைகளை ஒரே நொடியில் சரிசெய்யும்மந்திரக்கோல் அல்ல என கூறிய அவர், இந்த செயலி காவல்துறைக்கு உதவுவதாகவும், விமர்சனம் செய்யக்கூடியதாகும் இருக்கும் என்றும் விளக்கமளித்தார்.
Maiam Whistle App is out!
Android: https://t.co/I0mcc1T4Ms
iOS: https://t.co/UoTHLd127W pic.twitter.com/klv6IvXcPd— Kamal Haasan (@ikamalhaasan) April 30, 2018