Puducherry Girl Murder Issue: புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியைச் சார்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, சிறுமியின் உடல் முத்தியால்பேட்டை பாப்பம்மாள் மயானத்தில் பாதுகாப்புடன் புதைக்கப்பட்டது.
இவ்வழக்கில் தொடர்புடைய கருணாஸ் (வயசு 19), விவேகானந்தர் (வயசு 59) ஆகிய இருவரை நீதிமன்ற காவலில் எடுக்கப்பட்டனர். இவ்வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட இருவரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவெடுத்துள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
முன்னதாக குற்றம் சாட்டப்பட்ட கருணாஸ், விவேகானந்தர் ஆகிய இருவரையும் நீதிமன்றத்துக்கு அழைத்து வராமல் காலாப்பட்டு மத்திய சிறைக்கு போலீஸார் அழைத்து சென்றனர். அதைத்தொடர்ந்து நீதிபதி இளவரசன் சிறைச்சாலைக்கு புறப்பட்டு சென்றார். அதைத்தொடர்ந்து இருவரையும் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு சம்பவம் எதிரொலியாக காவல் துறை உயர் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, குற்றம் - புலனாய்வு பிரிவு முதுநிலை கண்காணிப்பாளர் சுவாதி சிங் போக்குவரத்து பிரிவிற்கு மாற்றம் செய்து அவருக்கு பதிலாக புதிதாக வந்துள்ள IPS அதிகாரி கலைவாணன் குற்றம்-புலனாய்வு பிரிவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், புதிதாக வந்துள்ள IPS அதிகாரி அஜித் குமார் சிங்லா ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு சார்பு செயலர் பிறப்பித்துள்ளார். இதேபோன்று, படுகொலை செய்யப்பட்ட ஐந்தாம் வகுப்பு மாணவி ஆர்த்தி வழக்கை விசாரித்த முத்தியால்பேட்டை ஆய்வாளர் தனசெல்வம் மற்றும் உதவி ஆய்வாளர் ஜெய குருநாதன் ஆகியோர் அதிரடியாக ஆயுதப்படை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும் ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் கண்ணன் முத்தியால்பேட்டை காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரியாங்குப்பம் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் மீண்டும் முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காவல்துறை தலைமை அலுவலகம் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் சிறுமி கொலையை கண்டித்து பந்த் அறிவிக்கப்பட்டது. பந்த் காரணமாக நாளை நண்பகல் மற்றும் மதிய காட்சிகளை திரையரங்குகள் ரத்து செய்துள்ளன. தனியார் பேருந்துகள், ஆட்டோ - டெம்போக்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களும் நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.
கடைகள் அடைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரிக்கை விடுக்கப்ட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ