தன் தாயாருடன் செல்பி எடுத்துக்கொண்டு செயல் தலைவர்!

அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் திமுக செயல் தலைவர் தன் தாயாருடன் செல்பி புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்!

Last Updated : May 13, 2018, 01:43 PM IST
தன் தாயாருடன் செல்பி எடுத்துக்கொண்டு செயல் தலைவர்!

அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் திமுக செயல் தலைவர் தன் தாயாருடன் செல்பி புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்!

மே மாதத்தின் இரண்டாம் ஞாயிறு அன்று அன்னையர் தினம் கொண்டாட படுகிறது. அந்த வகையில் இன்று அன்னையர் தினம் நாடுமுழுவது அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

வாழும் தெய்வமாக கருதப்படமு அன்னையினை வணங்கி போற்றும் வகையில் பலரும் தங்கள் தாயாருடன் புகைப்படங்களை எடுத்து இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தன் தாயாருடன் அன்னையர் தினமான இன்று செல்பி புகைப்படம் எடுத்து அதனை தன் ட்விட்டர் பக்கத்தினில் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவுடன் அண்ணையர் தின வாழ்த்தினை தெரிவிக்கும் வகையில் அவர் பதிவிட்டுள்ளதாவது...

"அன்னையர் தினத்தையொட்டி கருவிலேயே உணர்வூட்டி, உயிரூட்டி, உறவையும் உலகையும் உவப்புடன் காட்டிய அன்புத்தாயிடம் கோபாலபுரம் இல்லத்தில் வாழ்த்துகளைப் பெற்று மகிழ்ந்தேன். இன்று மட்டுமல்ல, எந்நாளும் அன்னையரை இதயத்தில் ஏந்தி போற்றி மகிழ்ந்திடுவோம்!" என குறிப்பிட்டுள்ளார்.

More Stories

Trending News