சென்னை: சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கொரோனா உச்சத்தில் இருந்தபோது ஆட்சிப்பொறுப்பேற்ற திமுக பல கட்ட நடவடிக்கைகள் மூலம் தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்தது.
தொற்று கட்டுப்பாட்டுக்கு மத்தியில் மாநில நலன் மற்றும் முன்னேற்றத்துக்கான பல வித நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில், தொழிற்துறையில் தமிழகத்தை நாட்டின் தலைசிறந்த மாநிலமாக மாற்றுவதற்கான பணிகள் அதி தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் (Tamil Nadu) 82,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 47 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று ஒப்பந்தம் செய்யப்படுகின்றன.
சென்னை கிண்டியில் இன்று இது குறித்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், எரிசக்தி, காற்றாலை, சரக்கு போக்குவரத்து, வாகனத்துறை உள்ளிட்ட துறைகளில் 47 திட்டங்களுக்கு முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டின் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனங்களான காப்பொட்டல் லேண்ட், அதானி, ஜெ.எஸ்.டபிள்யு போன்ற பல முன்னணி நிறுவனங்கள் தமிழக அரசுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன. ஏற்கனவே உலகின் மிகப்பெரிய இரு சக்கர மின்சார ஸ்கூட்டருக்கான தொழிற்சாலையான ஓலா எலக்ட்ரிக்கின் (Ola Electric) பணிகள் நிறைவடைந்து இன்னும் சில நாட்களில் உற்பத்தி துவங்கவுள்ளது.
Investment Conclave 2021, Chennai
47 Projects
Rs. 28, 664 Crore Investment
82,400 EmploymentUnder the able leadership of Hon’ble Chief Minister of Tamil Nadu . pic.twitter.com/aCgtM1te1w
— Thangam Thenarasu (@TThenarasu) July 19, 2021
ALSO READ: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
இந்த புதிய திட்டங்கள் மூலம் தமிழகத்தின் சுமார் 82,400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இவை தவிர மேலும் 14 திட்டங்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin)அவர்கள் டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்தார். பல முக்கிய விஷயங்களைக் குறித்து இந்த சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவரை சந்தித்தபிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், “முதல்முறையாக இன்று குடியரசுத் தலைவரை சந்தித்தேன். தமிழ்நாட்டின் முதல்வராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவை தலைமைத் தாங்கி நடத்த குடியரசுத்தலைவருக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். அந்த விழாவில் சட்டமன்ற வளாகத்துக்குள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறந்து வைக்கப்படும் என்ற விவரத்தையும் நான் அவரிடம் தெரிவித்திருக்கிறேன்.” என்று கூறினார்.
ALSO READ: டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR