TN Weather Report: உங்கள் ஊரில் மழை பெய்யுமா? இதோ வானிலை தகவல்

Weather Forecast: தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பின்வரும் வானிலை மாற்றங்கள் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 15, 2022, 12:43 PM IST
  • மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்பு.
  • எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
  • முழுமையான தகவல் இதோ.
TN Weather Report: உங்கள் ஊரில் மழை பெய்யுமா? இதோ வானிலை தகவல் title=

தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பின்வரும் வானிலை மாற்றங்கள் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15.09.2022 மற்றும் 16.09.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17.09.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

18.09.2022 மற்றும் 19.09.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை:

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மேலும் படிக்க | தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை தகவல்! 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  

கோவில்பட்டி (தூத்துக்குடி), உதகமண்டலம் (நீலகிரி) தலா 5, தேவாலா (நீலகிரி), கெட்டி (நீலகிரி), மூரர்பாளையம் (கள்ளக்குறிச்சி) தலா 4, சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), திருமங்கலம் (மதுரை), தொழுதூர் (கடலூர்), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), பந்தலூர் (நீலகிரி), மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), கச்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி) தலா 3, பேரையூர் (மதுரை), கமுதி (இராமநாதபுரம்), மதுரை விமான நிலையம் (மதுரை), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), கீழ்பாடி (கள்ளக்குறிச்சி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) தலா 2,  அழகரை எஸ்டேட் (நீலகிரி), கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி), நிலக்கோட்டை (திண்டுக்கல்), செய்யூர் (செங்கல்பட்டு), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கரியகோவில் அணை (சேலம்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), கீழச்செருவை (கடலூர்) தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), மேமாத்தூர் (கடலூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை.   

மேலும் படிக்க | அடுத்து தமிழகத்தில் எப்போது மழை? வானிலை மையம் தகவல்! 

Trending News