சென்னையில் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சென்னையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 906 ஆக உயர்வு...!
தமிழகத்தில் இன்று மேலும் 161 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று மேலும் 161 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு இல்லாததால் பலி எண்ணிக்கை 27 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 48 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால், மொத்தம் 1258 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1035 பேர் சிகிச்சையில் உள்ளனர். தற்போது 31,375 பேர் வீட்டுக்கண்காணிப்பிலும், 40 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர். இன்று மட்டும் 9,787 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 161 பேரில் சென்னையில் மட்டும் 138 பேருக்கு உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அதிகபட்ச பாதிப்பாக அமைந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மற்ற மாவட்ட பாதிப்புகளில் செங்கல்பட்டு, மதுரையில் தலா 5 பேருக்கும், காஞ்சிபுரம், ராமநாதபுரத்தில் தலா 3 பேருக்கும், பெரம்பலூரில் 2 பேருக்கும், கடலூர், சேலம், திருவள்ளூர், அரியலூர், ராணிப்பேட்டையில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
District
|
Confirmed
|
Active
|
Recovered
|
Deceased
|
Chennai | 138910 | 681 | 4214 | 15 |
Coimbatore | 141 | 16 | 4125 | 0 |
Tiruppur | 112 | 9 | 12103 | 0 |
Madurai | 584 | 42 | 40 | 2 |
Dindigul | 80 | 8 | 571 | 1 |
Chengalpattu | 576 | 27 | 548 | 1 |
Erode | 70 | 0 | 69 | 1 |
Tirunelveli | 65 | 11 | 154 | 0 |
Namakkal | 61 | 12 | 49 | 0 |
Thiruvallur | 156 | 26 | 30 | 0 |
Viluppuram | 54 | 29 | 23 | 2 |
Thanjavur | 54 | 19 | 235 | 0 |
Tiruchirappalli | 51 | 6 | 45 | 0 |
Theni | 44 | 6 | 137 | 1 |
Nagapattinam | 44 | 9 | 435 | 0 |
Karur | 41 | 0 | 41 | 0 |
Ranipet | 139 | 6 | 33 | 0 |
Tenkasi | 35 | 30 | 5 | 0 |
Virudhunagar | 32 | 13 | 319 | 0 |
Salem | 132 | 9 | 323 | 0 |
Thiruvarur | 30 | 14 | 116 | 0 |
Thoothukkudi | 27 | 0 | 25 | 2 |
Cuddalore | 127 | 6 | 321 | 0 |
Kancheepuram | 325 | 15 | 9 | 1 |
Vellore | 23 | 8 | 14 | 1 |
Tirupathur | 18 | 1 | 17 | 0 |
Ramanathapuram | 318 | 8 | 10 | 0 |
Kanniyakumari | 16 | 6 | 10 | 0 |
Sivaganga | 12 | 2 | 10 | 0 |
Tiruvannamalai | 11 | 1 | 10 | 0 |
The Nilgiris | 9 | 0 | 9 | 0 |
Perambalur | 29 | 8 | 1 | 0 |
Kallakurichi | 9 | 6 | 3 | 0 |
Ariyalur | 16 | 2 | 4 | 0 |
Pudukkottai | 1 | 1 | 0 | 0 |
Dharmapuri | 1 | 1 | 0 | 0 |
பாதிப்புக்கு உள்ளானவர்களில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் - 142 பேர், 13 முதல் 60 வயதுக்குள் இருப்பவர்கள் - 1929 பேர், 60 வயதை கடந்தவர்கள் - 252 பேர் உள்ளனர். இன்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆக உள்ளது. மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1258 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லாததால் பலி எண்ணிக்கை 27 ஆக உள்ளது. மாநிலத்தில் உயிரிழப்பு விகிதம் 1.16 சதவீதமாக உள்ளது.