ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021யில் நடக்கும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள் "வரும் 2021-ல் தமிழக மக்கள் அரசியலில் மிகப்பெரிய அற்புதத்தை அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் தமிழக மக்கள் நிகழ்த்துவார்கள்" என தெரிவித்தார்.
ரஜினியின் இந்த கருத்திற்கு பதில் அளிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது., "ஆம்! அதிசயம் நிகழும். 'தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்' என்கிற நினைப்பிலும்,மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடகவெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத்தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021-யில் நடக்கும், நடந்தே தீரும்." என தெரிவித்துள்ளார்.
ஆம்! அதிசயம் நிகழும்.
'தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்' என்கிற நினைப்பிலும்,மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து,அதீத ஊடகவெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் இனமானத்தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021யில் நடக்கும், நடந்தே தீரும்.
— சீமான் (@SeemanOfficial) November 21, 2019
கோவா தேசிய திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த்க்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. கோவா நிகழ்ச்சியை முடித்து சென்னை திரும்பிய அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் தெரிவித்ததாவது., "நான் வாங்கிய விருதுக்கு தமிழ் மக்கள் தான் காரணம். விருதினை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து கமல்ஹாசனுடன் கூட்டணி வைப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு., கட்சி தொடங்கிய பின் உறுப்பினர்களுடன் ஆலோசித்து எடுக்க வேண்டிய முடிவு அது. யாருடன் கூட்டணி, யார் முதல்வர் என்பதும் அப்போது முடிவு எடுக்க வேண்டிய விஷயம் என குறிப்பிட்டார்.
முன்னதாக., திராவிட மண்ணில் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில்., "வரும் 2021-ல் தமிழக மக்கள் அரசியலில் மிகப்பெரிய அற்புதத்தை அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் தமிழக மக்கள் நிகழ்த்துவார்கள்" என தெரிவித்தார். இந்நிலையில் ரஜினியின் கருத்திற்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது சீமான் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம், ரஜினியுடனான கூட்டணி குறித்து கமல்ஹாசனிடன் செய்தியாளர்கள் கேட்களையில்., "தமிழ் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு சேர்ந்து பயணிக்க வேண்டி வந்தால் நிச்சயம் பயணிப்போம்" என்று தெரிவித்திருந்தார்.