தான் அரசியலில் ஈடுபடுவது உறுதி என்றும், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இவரின் கருத்துக்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் தொடர்ந்து எழுந்து வருகிறது.
ரஜினி அரசியல் வருகை: டிவிட்டரில் நகைச்சுவை டிவிட்!!
இந்நிலையில், தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என பலமுகங்களை கொண்ட விசு அவர்கள், ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதைக்குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இவர் தற்போது பாஜ கட்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி
தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விசு கூறியதாவது:-
கான மயிலாட, கண்டிருந்த வான்கோழி, தானும் அதுவாகப் பாவித்து தன் பொல்லாச்சிறகை விரித்து ஆடினால் ...
காட்டுல மயில் அழகா தோகைய விரிச்சு சூப்பரா dance ஆடுமாம் .. உடனே வான் கோழிக்கு அடி வயிறு எரியுமாம் பொறாமை புடுங்ககித் தின்னுமாம் .. அதுவும் அசிங்கமான உடம்பை வச்சுக்கிட்டு கண்றாவியா தத்தக்கா பொத்தக்கான்னு dance ஆடுமாம் ..
ரஜினி நீ மயில் .. மற்ற உதிரி கோஷ்டிகள் வான்கோழி .. நீ ஆடு ராஜா ஆடு .. .. உன் இறகால் நொந்து போன தமிழ் நாட்டு மக்களின் இருதயங்களை ஆன்மீக வருடல் வருடி இருக்கிறாய் .. நன்றி ரஜினி நன்றி .. என ரஜினியின் ஆன்மிக அரசியல் குறித்து இயக்குநர் விசு கருத்து தெரிவித்துள்ளார்.
கமலின் அரசியல் வருகையை விமர்சித்து கருத்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.