திருவையாறில் புறவழிச்சாலை - தடுப்பதற்கு தயாராகும் சீமான்

திருவையாறில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் அது தடுக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 27, 2022, 05:15 PM IST
  • திருவறையாறில் புறவழிச்சாலை அமைக்கப்படவிருக்கிறத்
  • விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
  • போராட்டத்தில் இன்று சீமான் கலந்துகொண்டார்
திருவையாறில் புறவழிச்சாலை - தடுப்பதற்கு தயாராகும் சீமான் title=

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து மணக்கரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், பெரும்புலியூர், திருவையாறு ஆகிய ஊர்கள் வழியாக 6.74 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.191.34 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த புறவழிச்சாலை முழுவதும் விவசாய நிலங்களில் அமைக்கப்படுவதால், நிலங்களை அழித்து அதில் சாலை அமைக்கப்பட்டால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி விவசாயிகள் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக கண்டியூரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

இந்நிலையில்விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு விவசாயிகளிடம் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “திருவையாறில் புறவழிச்சாலை தேவையில்லை. விவசாயிகள் உள்ளிட்ட யாரும் சாலை விரிவாக்கம் செய்யுமாறு கேட்கவில்லை. அப்படி இருக்கையில் ஏன் இந்த அவசரம். வளர்ந்துள்ள நெற்பயிர்களை மூடி மண்ணை கொட்டி உள்ளார்கள். பயிர்களை அழிப்பது, உயிர்களை அழிப்பதற்கு சமம். விவசாயிகளுக்கு பயிர் தான் உயிர். முப்போகம் விளையும் பூமி தஞ்சையில் பயிர்களை அழித்து சாலை போடுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விளைநிலத்தை அழித்து சாலை போட முடியும். ஆனால் சாலையை அழித்து விளை நிலம் உருவாக்க முடியாது. 

புறவழிச்சாலை வந்தால் அது மணல் திருட்டுக்கு தான் பயன்படும். சம்பா அறுவடை முடிந்த பிறகு புறவழிச்சாலை அமைக்கலாமா என அனைத்து விவசாயிகளிடம் கலந்து ஆலோசித்து அதற்கு உரிய தொகை கொடுத்து அதன் பிறகு சாலை அமைப்பது என்பது ஒரு அணுகுமுறை. ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் பயிர்களை அழித்து சாலை போடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். போராடும் விவசாயிகளுக்கு நான் உறுதுணையாக இருப்பேன். 

சாலை போட வந்தால் நானே நின்று தடுப்பேன். இதேப்போல் பாபநாசம் தாலுகா திருமண்டக்குடி சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.450 கோடியை கொடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

மேலும் படிக்க | டாஸ்மாக் நிர்வாகிகளே உடனே இந்த லிஸ்ட் ரெடி பண்ணுங்க : சென்னை ஐகோர்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News