தமிழக மீனவர்கள் 4 பேர் கைது...!

Last Updated : Aug 14, 2017, 09:46 AM IST
தமிழக மீனவர்கள் 4 பேர் கைது...!

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தமிழக மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையின் பருத்தித் துறை கடற்பகுதியில், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, நாகை மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வேதாரண்யத்தை சேர்ந்த கபிலன், ராமசாமி, கோவிந்தசாமி மற்றும் தேவராயன் என்று தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

More Stories

Trending News