3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கிடையாது: TN தேர்தல் ஆணையர்!

தமிழகத்தில் மக்களவை தேர்தளுடன், காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்! 

Last Updated : Mar 11, 2019, 08:35 AM IST
3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கிடையாது: TN தேர்தல் ஆணையர்! title=

தமிழகத்தில் மக்களவை தேர்தளுடன், காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்! 

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 18 ஆம்  தேதி வாக்குப்பதிவு நடைபெறும். புதுச்சேரியிலும் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடைபெறும். வேட்புமனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்குகிறது. தாக்கலுக்கான கடைசிநாள் மார்ச் 26. வேட்புமனு திரும்பப்பெறும் கடைசி நாள் மார்ச் 29 ஆம் தேதி என நேற்று தேர்தல் ஆணையர் சுனில் அரோர அறிவித்தார். 

இதையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, ஏப்ரல் 18 ஆம் தேதி 39 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளதாக கூறினார். அதே தேதியில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றார்.

தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

தேர்தல் பாதுகாப்புக்காக 200 கம்பெனி துணை ராணுவப் படை வீரர்களை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் என்று அவர் கூறினார். தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மாவட்ட வாரியாக தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

 

Trending News