August 16 மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழகபட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறும் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 15, 2021, 08:06 PM IST
  • தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் சம்பந்தமான பல் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன
  • ஆகஸ்ட் 16ம் தேதியன்று அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
  • சென்னையில் சங்க2த்தின் மாநிலத் தலைவர் அறிவிப்பு
August 16 மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் title=

சென்னை: தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றபின் முதல் முறையாக கடந்த வெள்ளியன்று சென்னை கலைவாணர் அரங்கில் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா முறையில் இ பட்ஜெட் வடிவில் தாக்கல் செய்து மூன்று மணி நேரம் பட்ஜெட் தொடர்பாக விரிவாக பேசினார்.

"நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சென்னையில் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு ,பொதுச்செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்டது.அவ்வறிக்கையில் மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் உள்ளது அதனை நாங்கள் வரவேற்கிறோம்.

Also Read | 75-ஆவது சுதந்திர தினம்: முதல்முறையாக கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் மு.க.ஸ்டாலின்

 அதே போல் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு அதன் பாதுகாப்பு நிதியை ரூபாய் 5லட்சமாக உயர்த்தி அறிவித்ததை வரவேற்கிறோம்.அதே போன்று மகளிர் அரசு ஊழியர்களுக்கு பணிபுரியும் காலங்களில் மகப்பேறு விடுப்பு 9மாத காலங்களில் இருந்து 12மாத காலமாக உயர்த்தப்பட்டதற்கும் எங்களின் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்கள் சார்பாக வரவேற்கிறோம்.

ஆனால் தேர்தல் சமயத்தில் தி.மு.க அரசு கொடுத்த வாக்குறுதிகளில் எந்தவொன்றும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

அவர்கள் வைத்த கோரிக்கைகள்: அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்தப்படும்.

Also Read | பெரியாரின் கனவை நிறைவேற்றிய ஸ்டாலின் - வைரமுத்து

.அங்கான்வாடி, சத்துணவு, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகங்கள், எம்ஆர்பி செவிலியர்கள் போன்ற 4 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான குறைந்தபட்ச ஓய்வூதியம்,காலமுறை ஊதியம் வழங்கப்படும்.

சாலைப் பணியாளர்களின் 41மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறைபடுத்தப்படும்.சென்ற ஆண்டு கொரோனாவை காரணம் காட்டி 27மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை அறிவிக்காதது. இது தவிர அரசு துறைகளில்  நான்கரை லட்சம்  காலிப் பணியிடங்களை   நிரப்பப்படும் போன்ற அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த எந்தவொரு அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லாதது வருத்தமளிக்கிறது.

தமிழக முதலமைச்சர் எங்களுடைய கோரிக்கையை உடனடியாக வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே  நிறைவேற்றிட வேண்டும்.என்று அரசு ஊழியர்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஆகஸ்ட்16 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளோம்.என்று தெரிவித்தனர்.!!

Also Read | இயல், இசை, நாடக மன்ற புதிய தலைவராக நடிகர் வாகை சந்திரசேகரை நியமித்தார் முதல்வர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News