வட மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுரை!
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. மேலும், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றும், கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றும் சந்திக்கும் பகுதியானது தமிழக பகுதிகளில் நிலவுவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறுகையில்..!
கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வட மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!