TNPSC குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியானது! எவ்வாறு பார்ப்பது?

தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட குரூப் 1 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது!

Last Updated : Apr 3, 2019, 10:19 PM IST
TNPSC குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியானது! எவ்வாறு பார்ப்பது? title=

தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட குரூப் 1 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது!

181 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்விற்கு 1,68,549 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தேர்வில் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு உள்ளிட்ட விதிகளின் அடிப்படையில் தற்காலிகமாக 9,050 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப் பட்டுள்ளது. இவர்களுக்கான முதன்மை தேர்வு வருகிற ஜூலை மாதம் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மைத் தேர்வில் வெற்றிப்பெற்ற தேர்வாளர்கள், அவர்களது மூலச்சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில், அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருகிற 10 முதல் 20 ஆகிய தேதிகளுக்குள் பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான குறிப்பாணை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதோடு, தேர்வர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

---தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது---

  • TNPSC இணையதளத்தை திறக்கவும்.
  • இணையப்பக்கத்தில் இருக்கும் Results இணைப்பை பயண்படுத்தி தேர்வு முடிவுகள் பக்கத்தை திறக்கவும்.
  • குரூப் 1 தேர்வுகள் முடிவுக்கான பிரத்தியேக இணைப்பினை பின் தொடரவும்.
  • பின்னர் திறக்கப்படும் PDF-ல் தேரிய தேர்வாளர்களின் தேர்வு எண்ணை பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

Trending News