)
Virudhunagar Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024 மக்களவைத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி 7ஆம் கட்ட வாக்குப்பதிவுடன் நிறைவடைந்தது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி 102 தொகுதிகளில் நடந்தது. வாக்குப்பதிவு எண்ணிக்கை 66.14 சதவீதமாக இருந்தது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி 89 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் 66.71 சதவீத வாக்குகள் பதிவாகின. மே 7ஆம் தேதி 94 நாடாளுமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற மூன்றாம் கட்டத் தேர்தலில் 65.68 சதவீத வாக்குகள் பதிவாகின.
சமீபத்திய அப்டேட் என்ன?
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாக்கூருக்கும் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய் பிரபாகரனுக்கும் கடும் போடி நிலவி வருகிறது. பெரிய வாக்கு வித்தியாசத்தில் ராதிகா சரத்குமார் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
மே 13ஆம் தேதி நடைபெற்ற நான்காம் கட்டத் தேர்தலில் 96 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 69.16 சதவீத வாக்குகள் பதிவாகின. 6 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் 49 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடந்த ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதி நடைபெற்றது, இதில், 62.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆறாவது கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதி 58 மக்களவைத் தொகுதிகளில் நிறைவடைந்தது. இதன் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 63.36 சதவீதமாக இருந்தது. ஏழாம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடந்தது. 57 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் 59.5% வாக்குகள் பதிவாகின.
தமிழ் நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளில் முதல் கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்தது. பல்வேறு அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ள தமிழ் நாட்டின் விருதுநகர் தொகுதி பற்றிய முழுமையான விவரங்களை இங்கே காணலாம். விருதுநகர் மக்களவைத் தொகுதி தனிச்சிறப்பு வாய்ந்த தொகுதி. பல தொழில்கள் செழிக்கும் தொகுதியாக இது உள்ளது. 1977 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் எம்ஜிஆர் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வர் ஆனார். மேலும், விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த முன்னாள் முதல்வர் காமராஜர் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
விருதுநகர் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் - திமுக கூட்டணியின் மாணிக்கம் தாகூர்
விருதுநகரில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் - திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை,
விருதுநகர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 15,01,942, இதில் ஆண் வாக்காளர்கள்-7,33,217, பெண் வாக்காளர்கள்- 7,68,520, மூன்றாம் பாலின வாக்காளர்கள்- 205
2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதம் = 70%
2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்:
திமுக கூட்டணி - மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்)
அதிமுக கூட்டணி- விஜய பிரபாகரன் (தேமுதிக)
எண்டிஏ கூட்டணி - ராதிகா சரத்குமார்
நாம் தமிழர் கட்சி - கவுசிக்
கள நிலவரம் கூறுவது என்ன?
இம்முறை விருதுநகரில் திமுக வேட்பாளருக்கும் தேமுதிக வேட்பாளருக்கும் இடையில் கடுமையான போட்டி உள்ளதாக கூறப்படுகின்றது. மக்களிடையே இருவருக்கும் சமமான ஆதரவு இருப்பதாக எமது கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விருதுநகர்: 2019 மக்களவைத் தேர்தல்:
வெற்றி பெற்றவர் - மாணிக் தாகூர், காங்கிரஸ்
பெற்ற வாக்குகள் - 470883
இரண்டாம் இடம் -அழகர்சாமி, தேமுதிக
பெற்ற வாக்குகள் - 316329
மூன்றாம் இடம் - பரமசிவ ஐயப்பன், அமமுக
பெற்ற வாக்குகள் - 107615
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ