BJP MLA வானதி சீனிவாசனின் அலுவலகத்தில் பணம் எண்ணும் மிஷின் இருந்ததன் பின்னணி

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற திருமதி வானதி சீனிவாசன் தொடர்பான புகைப்படம் ஒன்று இன்று சமூக ஊடகங்களில் வைரலானது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 12, 2021, 09:52 PM IST
BJP MLA வானதி சீனிவாசனின் அலுவலகத்தில் பணம் எண்ணும் மிஷின் இருந்ததன் பின்னணி title=

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற திருமதி வானதி சீனிவாசன் தொடர்பான புகைப்படம் ஒன்று இன்று சமூக ஊடகங்களில் வைரலானது.

வைரலான புகைப்படத்தில், வானதி சீனிவாசன் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவருடைய பின்னணியில் பணம் எண்ணும் "கவுண்டிங் மெஷின்" இருந்தது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.  
 
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார் வானதி சீனிவாசன். அவர் நடிகர் கமலஹாசனை தோற்கடித்து வெற்றிக்கொடி நாட்டினார்.  

கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் "தன லாபம்" என எழுதி வைத்து அவர் பூஜைகள் செய்தது சர்ச்சைகளை எழுப்பியது.

vanathi

இந்த பின்னணியில் அவருக்கு அருகில் பணம் எண்ணும் இயந்திரம் இருப்பது மீண்டும் சர்ச்சைகளை எழுப்பியது. இன்று காணொலி காட்சி மூலம் ஒரு  ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்துக் கொண்டார்.  

அந்த கூட்டத்தின் புகைப்படங்கள் வெளியானபோது, வானதி சீனிவாசனின் அருகில் பணம் என்னும் மெஷின் இருந்தது. இது சமூக வலைதளங்களில்  வெளியாகி வைரலானது. கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசனும் சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இயங்குபவர். தன் மீதான விமர்சனங்களை அறிந்தவுடனே, டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

”இன்று காலை ரேஸ் கோர்ஸில் மக்களை சந்தித்துவிட்டு வீட்டுக்கு வர நேரம் இல்லாத காரணத்தினால் நண்பரின் அலுவலகத்தில் காணொளி கூட்டத்தில் கலந்து கொண்டேன். அது எனது அலுவலகம் அல்ல . கவுண்டிங் மெஷின் இருப்பதும் எனக்கு தெரியாது. அதற்குள் ஒரு சிலர் கற்பனை சிறகுகளை விறிக்கிறார்கள்” என்று வானதி சீனிவாசன் விளக்கம் அளித்தார்.

உண்மையில் இன்று காலை முதல் வானதி சீனிவாசன் எங்கிருந்தார்? அவரது டிவிட்டர் பதிவில் அவர் அவ்வப்போது பதிவிட்டு வந்த பதிவுகளே அவருக்கு சாட்சியமளிக்கின்றன.

dana
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி செய்து கொண்டே மக்களின் குறைகளை கேட்டு அறிந்ததாக காலை சுமார் ஒன்பது மணிவாக்கில் வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.

மதியம் சுமார் ஒரு மணிக்கு, கோவை அம்மன் குளம் ஹவுசிங் யூனிட் பகுதிக்கு சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தேன். அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாக்கடை பராமரிப்பு, முதியோர் பென்ஷன் போன்ற குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினேன் என்று அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதன் பிறகு, திருமதி வானதி சீனிவாசன் இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் சிலவற்றை சென்று பார்வையிட்டார்.

ALSO READ | செப்டம்பர் 11: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News