ஒரே பிளான் தூள் கிளப்பும் ஜியோ... 2ஜிபி டேட்டா..! 365 நாட்கள் வேலிடிட்டி 268 ரூபாய் மட்டுமே

ஜியோவின் மாஸ் பிளான் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் 365 நாளும் வேலிடிட்டி கொண்ட இந்த பிளானுக்கு மாதம் 268 ரூபாய் செலவழித்தால் போதும். கூடவே ஓடிடி சப்ஸ்கிரிப்சன்களும் இருக்கிறன்றன.   

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 4, 2023, 10:40 AM IST
  • ஜியோவின் ஆண்டு திட்டங்கள்
  • மாதம் ரூ.268 செலவழித்தால் போதும்
  • தினசரி 2ஜிபி டேட்டா, வாய்ஸ்கால் கிடைக்கும்
ஒரே பிளான் தூள் கிளப்பும் ஜியோ... 2ஜிபி டேட்டா..! 365 நாட்கள் வேலிடிட்டி 268 ரூபாய் மட்டுமே title=

மூன்று மாதம் அல்லது ஒரு மாதம் கொண்ட பிளான்களை ரீச்சார்ஜ் செய்யும் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால், நீங்கள் ஆண்டுக்கு ஒருமுறை ரீச்சார்ஜ் செய்யும் பிளானை தேர்வு செய்யுங்கள். அதில் எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். ஆண்டு முழுவதும் 365 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் ஓடிடி சப்ஸ்கிரிப்சன்கள் கிடைக்கும். கூடுதலாகவோ அல்லது சில பத்து ரூபாய்கள் குறைவாக இருக்கும் மாத ரீச்சார்ஜ் பிளான்களுடன் ஒப்பிடும்போதும் அதே செலவில் கூடுதல் நன்மைகளை வாடிக்கையாளர்களாகிய நீங்கள் அனுபவிக்கலாம்.  

ஜியோ ரூ 2545 திட்டம்: 

336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளானில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகிறது. கூடுதலாக 5ஜி டேட்டா சலுகையும் உண்டு. 

மேலும் படிக்க | Whatsapp Online Tracker: உங்க கிட்ட யாரும் ஏமாற்ற முடியாது...! வாட்ஸ் அப்பில் பொறி வச்சு பிடிக்கலாம்

ஜியோ ரூ 2999 திட்டம்: 

இந்த பிளானின் வேலிடிட்டி 365 நாட்கள். நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 912 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் கால்கள், 100 தினசரி எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 23 நாட்கள் கூடுதலாக வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த நாட்களிலும் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம். 

ஜியோ ரூ 3178 திட்டம்: OTT சப்ஸ்கிரிப்சன்

365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 730 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை வழங்கப்படுகிறது. ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன், ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. 

ஜியோ ரூ 3227 திட்டம்: 

இந்த வருடாந்திர திட்டத்தில் மட்டுமே அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த நாட்களில் தினசரி 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 730 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதோடு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். 

அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. இந்த சலுகைகள் போக ஒரு வருடத்துக்கான அமேசான் பிரைம் வீடியோ சந்தா கொடுக்கப்படுகிறது. அதேபோல, ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவை பார்த்தால், வெறும் ரூ.268 மட்டுமே தேவைப்படுகிறது.

மேலும் படிக்க | டேட்டாவை அள்ளித் தரும் பிஎஸ்என்எல் - தீபாவளிக்கு அசத்தல் ஆப்பர்... வேறெங்கும் கிடைக்காது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News