தமிழக அரசின் பல்வேறு வகையான பதவிகளுக்கும் தனித்தனியாக கிரேடு வாரியாக தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், குரூப்-4, குரூப் 2, குரூப்-1, என்று பல்வேறு கட்டங்களில் தேர்வு நடதப்ப்பட்டு கல்வியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இதையடுத்து, குரூப் 2 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-இல் நடத்தப்பட்டது.
இதில், தேர்ச்சி பெற்றோருக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான முதல் கட்டக் கலந்தாய்வு கடந்த மார்ச் 19-இல் தொடங்கி ஏப்ரல் 3 வரையில் நடந்தது.
முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாமல் மீதமுள்ள 88 காலியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வரும் 25 ஆம் தேதி நடத்த தேர்வணையம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு 1:5 என்ற விகிதத்தில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டவர்களின் பதிவெண்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் முறையே அழைப்புக் கடிதம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தனித்தனியே விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை, அழைப்பாணையை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு வருகைதரத் தவறும்பட்சத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அதன் பின்னர் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்றும் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.