இந்திய ரயில்வே கட்டுப்பாட்டின் கீழ் 8500 க்கும் மேற்பட்ட ரயில்வே நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு போதுமான வசதிகளை வழங்குவதற்கு ரயில்வே பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வரும் மார்ச் மாதத்திலிருந்து, சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில், ராமேஸ்வரம் – ஓக்கா வாராந்திர விரைவு ரயில்கள் நாமக்கல் வழியாக இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!
இன்று இரவு புறப்பட இருக்கும் சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று இரவு 8:30 மணிக்கு புறப்பட இருந்த சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் இன்று இரவு 10:15 மணிக்கு புறப்படும்.
Special Train Rescheduled @DrmChennai @SalemDRM pic.twitter.com/cPg2JXHFZ4
கோவை - ராமேசுவரம் இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:-
Special Trains @SalemDRM @propgt14 @drmmadurai pic.twitter.com/EyKlOBQ6DP
இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே இயக்கத் திட்டமிடப்பட்டது. தற்போது அதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த ரயிலில் உள்ள அம்சங்கள் குறித்து பார்க்கலாம்:-
இந்த புல்லட் ரயில் மணிக்கு, 320 கி.மீ வேகத்தில் செல்லும்.
அகமதாபாத் - மும்பை இடையே 'புல்லட்' ரயில் இயக்குவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே துவக்கி வைத்தனர்.
இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைப்பெற்றது..
ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே இயக்கத் திட்டமிடப்பட்டது. தற்போது அதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது.
இன்று இரவு புறப்பட இருக்கும் சென்னை சென்ட்ரல் - மும்பை மெயில் ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட இருந்த சென்னை சென்ட்ரல் - மும்பை மெயில் நாளை காலை 7.15 மணிக்கு புறப்படும். இணை ரயில் தாமதமாக வருவதால் மும்பை மெயில் 7 மணி 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.