ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் விரைவு ரயிலில் புதுமணத் தம்பதியரிடம் இருந்து 20 சவரன் தங்க நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கப் பணம் திருட்டுப் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், அனைத்துக் கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக உள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வேலூரின் நிலவரம் என்ன என்பதை காணலாம்.
கும்பகோணம் பாலக்கரை அருகே அரசு பேருந்து ஓட்டுனர் ரமேஷ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு தாக்குதலை வீடியோ எடுத்த செய்தியாளர்களும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையம் நூறு சதவீதம் வாக்கு செலுத்த வேண்டும் என்று விளம்பரம் செய்தாலும், மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழக கேரள எல்லையில் தமிழக கால்நடை துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த இடும்பவனம் கார்த்திக் இரவு 10 மணிக்கு பிறகு 5 நிமிடங்கள் கூடிதலாக பிரச்சாரம் செய்ததால் அங்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரது பேச்சை நிறுத்துமாறு கூறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவை நிராகரிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.