COVID-19 தடுப்பூசி தயாரிப்பில் சீனாவுடன் பணியாற்ற தயார்: Donald Trump

அமெரிக்காவில், COVID-19 சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து தயாரிப்பில்,  முன்னேற்றம் காணப்படுவதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

Last Updated : Jul 22, 2020, 01:57 PM IST
  • கொரோனாவிற்கான தடுப்பூசி எதிர்பார்த்ததை விட மிக விரைவில் தயாரிக்கப்படும் என ட்ரம்ப் கூறியுள்ளார்
    கொரோனா வைரஸ் தொற்றுநோய் கடந்த டிசம்பரில் சீனாவில் ஹூபே மாகாணத்தின் வுஹான் (Wuhan) நகரில் தொடங்கியது.
    அமெரிக்காவை பொருத்தவரை, இதுவரை கொரோனாவினால் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
COVID-19 தடுப்பூசி தயாரிப்பில் சீனாவுடன் பணியாற்ற தயார்: Donald Trump title=

சீனா கோவிட் -19 தடுப்பூசியை முதலில் தயாரித்தால் சீனாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது என்று டிரம்ப் கூறுகிறார்

அமெரிக்காவில், COVID-19 சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து தயாரிப்பில்,  முன்னேற்றம் காணப்படுவதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

வெற்றிகரமாக COVID-19 தடுப்பூசியை முதலில் தயாரிக்கும் சீனா உட்பட எந்த நாட்டுடனும்,  இணைந்து பணியாற்ற தனது நிர்வாகம் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்தார்.

"எங்களுக்கு பயன் தரும் விஷயத்தில், யாருடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று டிரம்ப் செவ்வாயன்று  சீனா  கொரோனா தடுப்பு மருந்தை முதலில் தயாரித்தால், அதனுடன்  இணைந்து பணியாற்றத் தயாரா என்று கேட்டபோது இவ்வாறு கூறினார்.

ALSO READ | சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் நடக்கும் IAF கமாண்டர்கள் நிலையிலான மாநாடு

"தடுப்பூசி தயாரிப்பு மற்றும் சிகிச்சை தொடர்பாக நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம்," என்று Donald Trump கூறினார்.

கொரோனாவிற்கான  தடுப்பூசி எதிர்பார்த்ததை விட மிக விரைவில் தயாரிக்கப்பட்டு உடனடியாக விநியோகிக்கப்படும் என்றும் டிரம்ப் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்  கடந்த டிசம்பரில் சீனாவில் ஹூபே மாகாணத்தின் வுஹான் (Wuhan) நகரில் தொடங்கியது. ஆரம்பத்தில் வைரஸ் பரவல் தொடர்பான உண்மை நிலையை  சீனா மறைத்து வைத்திருப்பதாக அமெரிக்கா விமர்சித்துள்ளது. 

உலக சுகாதார அமைப்பில் சீனா ஆதிக்கம் செலுத்தி, வுஹானில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான உண்மை நிலை மறைக்கப்பட்டு,  உலகளாவிய தொற்றுநோயாக உருவெடுக்க சீனா  வழிவகுத்தது என கூறிய ட்ரம்ப், ​​ முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தால், இந்த நோய் சீனாவிற்குள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்  என்று டிரம்ப் கூறியுள்ளார்.

ALSO READ |Watch: இந்திய பாதுகாப்பு ஆயத்தங்களின் பலம் கூடியது: எதிரிகளை மிரட்ட வருகிறது ’துருவாஸ்த்ரா’

 உலகெங்கிலும் சுமார் ஒன்றரை கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 இந்தியாவில் இது வரை சுமார் 12 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவை பொருத்தவரை, 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒன்றரை லட்சம் பேர் இறந்து விட்டனர். 

உலகிலேயே கொரோனாவினால், அமெரிக்கா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News