கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா 'மிக பெரிய விலை' கொடுக்கு வேண்டியிருக்கும்: Donald Trump

கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் பெய்ஜிங்கின் தவறு தான்  என்று கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை மீண்டும் சீனா மீது கடுமையான குற்றசாட்டை வைத்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 8, 2020, 11:21 AM IST
  • கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் பெய்ஜிங்கின் தவறு தான் என்று கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை மீண்டும் சீனா மீது கடுமையான குற்றசாட்டை வைத்துள்ளார்.
  • அமெரிக்காவில் 2,10,000 பேர், கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் இறந்தனர்.
  • மற்ற எந்த எந்த நாட்டையும் விட அமெரிக்கா மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா 'மிக பெரிய விலை' கொடுக்கு வேண்டியிருக்கும்: Donald Trump title=

கொரோனா வைரஸில் இருந்து மீண்டது, 'கடவுளிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதம்' என்றும், தற்போது  தான் பரிபூரணமாக குணமடைந்துள்ளதாகவும் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கூறினார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணம் பெய்ஜிங்கின் தவறு தான் என்று கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை மீண்டும் சீனா மீது கடுமையான குற்றசாட்டை வைத்துள்ளார். இதற்கு சீனா "பெரிய விலை" கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்தார்.

கொரோனா வைரஸை பரப்ப, சீன உலகை கடும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

கோவிட் -19 க்கு சிகிச்சையளிக்க அவருக்கு வழங்கப்பட்ட பரிசோதனை ஆன்டிபாடி சிகிச்சையான REGN-COV2 மருந்து சிறப்பாக வேலை செய்ததாக, அமெரிக்க அதிபர் பாராட்டினார்.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மருந்து எளிதாக கிடைக்க செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

அமெரிக்காவில் 2,10,000 பேர், கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் இறந்தனர். இதற்கு ட்ரம்ப் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். மற்ற எந்த  எந்த நாட்டையும் விட அமெரிக்கா மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

 பல மாதங்களாக முகமூடிகளை அணிய மறுத்ததற்காகவும், அமெரிக்காவில் வைரஸ் பரவலை குறைத்து மதிப்பிட்டதற்காகவும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. 

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது சில நாட்களுக்கு முன் உறுதியானது. 

அதிக உடல் எடை வயது மூப்பு போன்ற பிரச்சினைகள் உள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு கொரோனா நோய் தொற்றும் ஏற்பட்டுள்ளதால், அவரது உடல் நல பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிகிச்சைக்காக அவர் அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரெட் தேசிய ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தற்போது, அவர் சிகிச்சை முடிந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளார்.

மேலும் படிக்க | US Election 2020: அதிபர் தேர்தலில் வரலாறு காணாத வகையில் பதியும் அஞ்சல் வாக்குகள் ..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

 

Trending News