Kim Jong Un: மெலிந்த தோற்றத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள்; காரணம் என்ன

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் என்றவுடன் நமது கண் முன் தோன்றுவது, அவரது உருண்டயான முகமும் குண்டான தோற்றமும் தான். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 28, 2021, 05:38 PM IST
  • கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்த கவலை
  • திடீர் எடை இழப்பு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது
  • வட கொரியாவில் தற்போது இது தான் பேசு பொருளாக உள்ளது.
Kim Jong Un: மெலிந்த தோற்றத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள்; காரணம் என்ன title=

பியோங்யாங்: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் என்றவுடன் நமது கண் முன் தோன்றுவது, அவரது உருண்டயான முகமும் குண்டான தோற்றமும் தான். ஆனால், பல நாட்களுக்கு பின் அவர் பொதுவில் தோன்றிய நிலையில், அவரது தோற்றம் அனைவரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது, வட கொரியாவில் தற்போது இது தான் பேசு பொருளாக உள்ளது. 

சமீபத்தில் வெளிவந்த ஒரு புகைப்படத்தைப் பார்க்கும்போது, ​​கிம் (Kim Jong Un) ஏதோ ஒரு தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறது.அவரது தோற்றத்தை பார்க்கும் போது, அவர் 10 முதல் 20 கிலோ எடையை இழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

சமீபத்திய புகைப்படங்களில் மெல்லிய தோற்றம்

வட கொரியாவின் (North Korea) அதிபர் கிம் நிறைய எடை இழந்துள்ளார் என்.கே. நியூஸ் செய்தி அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. கிம்மின் நவம்பர்-டிசம்பர் 2020 புகைப்படத்தை ஜூன் 2021 உடன் ஒப்பிடுகையில், சிம்ம சொப்பமமாக இருக்கும் சர்வாதிகாரி கிம் ஜாங் உன் எடை குறைந்துவிட்டார் என்பது தெளிவாகிறது. மெலிதாகத் தெரிகிறது.

ALSO READ | North Korea: POP இசை கேட்டால் மரண தண்டனை; கிம் ஜாங் உன் மக்களுக்கு எச்சரிக்கை

வட கொரியாவில் உள்ள மக்கள் அனைவரும் கிம்மின் உடல்நிலை குறித்து கவலைப்படுகிறார்கள். கொரியாவின் சேனல் (கே.சி.டி.வி), ஒரு நேர்காணலை மேற்கோள் காட்டி, கிம்மின் எடை இழப்புக்கு பின்னர் நாட்டு மக்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர் என செய்தி வெளியிட்டுள்ளது.  கிம் ஜாங் உன்னின் புகழை பாடும் ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

கிம் ஜாங் உன் உடல்நிலை

சர்வாதிகாரி கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து அரசாங்க சேனலில் பேசுவது ஒரு அசாதாரண சம்பவம். இப்போது மக்கள் அவரது உடல்நிலை குறித்து பகிரங்கமாக கவலை தெரிவித்து வருகின்றனர். ஊடக வெளிச்சத்திலிருந்து முற்றிலும் விலகி இருப்பது கிம்மின் பழக்கம். கடைசியாக பிப்ரவரி மாதம் பொது நிகழ்ச்சியின் கலந்து கொண்டார். அதன் பின் தற்போது தான் பொதுவில் தோன்றியுள்ளார். 

சியோலின் கொரியா இன்ஸ்டிடியூட் ஃபார் நேஷனல் யூனிஃபிகேஷனின் மூத்த ஆய்வாளர் ஹாங் மின் என்பவர்,  கிம்மின் உடல் எடை இழப்பு, நோயின் அறிகுறி இல்லை அவரது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சி என கூறியுள்ளார். 

அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்திற்கு பெயர் பெற்ற கிம், இதய பிரச்சினைகள் வராமல் இருக்க எடையை குறைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. கிம் ஜாங் உன்னிற்கு முன் வட கொரியாவை ஆண்ட அவரது தாத்தா மற்றும் தந்தை இருவரும் இருதய பிரச்சினைகளால் இறந்தனர் என்பதால், அவர் எச்சரிக்கையாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

ALSO READ | North Korea: ஆபாச படம் பார்த்த சிறுவனையும் குடும்பத்தையும் நாடு கடத்திய Kim Jong Un ...!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News