உலகளாவிய கொரோனா தொற்று பீதியை பயன்படுத்தி மக்களிடையே போலியான பொருட்களை வியாபாரிகள் விற்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு கூறுகிறது.
கொரோனா(Coronavirus) வைரஸ் தொற்று நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றின் காரணமாக மக்கள் தினம் தினம் பலர் இறந்து வருகின்றனர். உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தொற்றுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். மறுபுறம், சிலர் தங்கள் தனிப்பட்ட நலனுக்காக பாதுகாப்பு சாதனங்கள் என்ற பெயரில் மோசமான பொருட்களை மக்களிடையே விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் எந்த பொருளை வாங்குவது என அறியாமல் குழப்பமடைந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
READ | பானி பூரி பிரியர்களுக்கு நற்செய்தி.... புழக்கத்திற்கு வந்த பானி பூரி ATM..!
உலகளாவிய தொற்றுநோயான கொரோனா வைரஸை எதிர்க்க மருத்துவ சாதனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், மோசடி சம்பவங்களும் அதிகரித்துள்ளன என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.
இந்த நேரத்தில் போலி மற்றும் மோசமான தரமான பொருட்களை விற்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் (UNODC) நிர்வாக இயக்குனர் கடா வேலி இதுதொடர்பான ஆய்வு அறிக்கையினை வெளிப்படையாக வெளியிட்டுள்ளார்.
READ | புதுவை ஆளுநர் கிரண் பேடிக்கு கொரோனாவா? வெளியானது அதிர்ச்சி தகவல்...
மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் ஆபத்தில் ஆழ்த்தும் உலகளாவிய தொற்றுநோயான கொரோனா வைரஸால் ஏற்பட்ட சூழ்நிலையை குற்றவியல் கூறுகள் நம்பத்தகாத முறையில் பயன்படுத்த முயற்சிக்கின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மக்களின் அச்சங்கள் மற்றும் கவலைகளுக்கு மத்தியில், அதிகரித்து வரும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கான தேவையை தங்களுக்கு சாதகமாக இந்த வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர். இந்த தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்காக உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறை மற்றும் பிற சட்ட கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை இந்த தொற்றுநோய் அம்பலப்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.