State Bank Of India RD Scheme: நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல வகையான வசதிகள் வழங்கப்படுகின்றன. பாரத ஸ்டேட் வங்கியின் அத்தகைய திட்டம் குறித்து இங்கு காண்போம்.
இந்த திட்டத்தில் ரூ. 5 ஆயிரம் முதலீடு செய்வதன் மூலம், வங்கியில் இருந்து வட்டியாக ரூ.55 ஆயிரம் கிடைக்கும். இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது பாரத ஸ்டேட் வங்கியின் திட்டம் என்பதால் இதில் பணத்தை முதலீடு செய்வதில் எந்த ஆபத்தும் இல்லை.
தொடர் வைப்புத்தொகை (Recurring Deposit) வசதியை பாரத ஸ்டேட் வங்கி வழங்குகிறது, இதில் வாடிக்கையாளர்கள் நல்ல வட்டியின் பலனைப் பெறுகிறார்கள். எஸ்பிஐ தொடர் வைப்புத்தொகை திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 6.8 சதவீத வட்டியின் பலனைப் பெறுகிறார்கள். இதனுடன், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகளுக்கு தொடர் வைப்புத்தொகை திட்டத்தில் முதலீடு செய்துகொள்ள வங்கி வாய்ப்பளிக்கிறது என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அரசு வங்கிகளின் பட்டியலில் எஸ்பிஐ முதலிடத்தில் உள்ளது. உங்கள் வசதிக்கேற்ப வெவ்வேறு முதலீடு காலங்களுக்கு தொடர் வைப்புத்தொகை திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம்.
இதன் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டத்தில் நீங்கள் 100 ரூபாய் மூலம் முதலீடு செய்ய தொடங்கலாம். இத்துடன் ஒவ்வொரு மாதமும் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். நீங்கள் 1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு ஆர்டி செய்து கொள்ளலாம்.
நீங்கள் 55 ஆயிரம் ரூபாய் வட்டி விரும்பினால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் வைப்புத்தொகையை செலுத்த வேண்டும். இதனுடன், நீங்கள் 5 வருட காலத்திற்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் வங்கியில் இருந்து 6.5 சதவீத வட்டியின் பலனைப் பெறுவீர்கள். ஒவ்வொரு ஆண்டும் கூட்டுத்தொகைக்கான வட்டியும் அதிகரிக்கும். மேலும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு 54 ஆயிரத்து 957 ரூபாய் வட்டியாக கிடைக்கும்.
எந்த காலகட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
- ஒரு சாதாரண குடிமகன் 1 முதல் 2 வருடங்களுக்கும் குறைவான தொடர் வைப்புத்தொகை திட்டத்திற்கு 6.80 சதவீத வட்டியைப் பெறுவார். அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கு 7.30 சதவீத வட்டி கிடைக்கும்.
- 2 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 3 ஆண்டுகளுக்கு குறைவான தொடர் வைப்புத்தொகை திட்டத்தில், பொது குடிமக்களுக்கு 7 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீத வட்டியும் கிடைக்கும்.
- 3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகளுக்கு குறைவான பொது வைப்புத்தொகை திட்டத்தில், பொது குடிமக்களுக்கு 6.50 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7 சதவீத வட்டியும் கிடைக்கும்.
- 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பொது வைப்புத்தொகை திட்டத்தில், பொது குடிமக்களுக்கு 6.50 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீத வட்டியும் கிடைக்கும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: செப்டம்பர் 15 முதல் DA உயர்வு? ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பார்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ