NPS: சந்தாதாரர்களுக்கு முக்கிய செய்தி, இனி இந்த புதிய வசதி கிடைக்கும்

NPS News: என்பிஎஸ் சந்தாதாரர்களின் வசதிக்காக, தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை (NPST) வாட்ஸ்அப் சேவையைத் தொடங்கியுள்ளது. இதனால் அவர்கள் வீட்டில் இருந்தபடியே சந்தாதாரர்கள் தங்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 14, 2022, 11:03 AM IST
  • என்பிஎஸ் சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது.
  • இப்போது அரசு உங்களுக்கு பெரிய வசதிகளை செய்து தருகிறது.
  • அரசு ஓய்வூதியத் திட்டத்தை அரசாங்கம் நிறுத்திவிட்டதால், லட்சக்கணக்கான மக்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
NPS: சந்தாதாரர்களுக்கு முக்கிய செய்தி, இனி இந்த புதிய வசதி கிடைக்கும் title=

என்பிஎஸ் சமீபத்திய செய்திகள்: என்பிஎஸ் சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இப்போது அரசு உங்களுக்கு பெரிய வசதிகளை செய்து தருகிறது. அரசு ஓய்வூதியத் திட்டத்தை அரசாங்கம் நிறுத்திவிட்டதால், லட்சக்கணக்கான மக்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். 

இப்போது என்பிஎஸ் சந்தாதாரர்களின் வசதிக்காக, தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை (NPST) வாட்ஸ்அப் சேவையைத் தொடங்கியுள்ளது. இதனால் அவர்கள் வீட்டில் இருந்தபடியே சந்தாதாரர்கள் தங்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

என்பிஎஸ்-இன் கீழ் பெரிய வசதி கிடைக்கும்

தேசிய ஓய்வூதியத் திட்டம் அதாவது என்பிஎஸ் என்பது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) இயக்கப்படும் அரசாங்கத்தின் ஒரு திட்டமாகும். என்பிஎஸ் என்பது ஒரு குறைந்த விலை முதலீட்டு திட்டமாகும். இது சந்தை நிலைக்கு ஏற்ப வருமானத்தை வழங்குகிறது. இதில், சந்தாதாரருக்கும் வரி விலக்கு கிடைக்கும். இதில், இந்தியாவின் குடிமக்கள் அனைவரும் (குடியிருப்பு மற்றும் குடியுரிமை இல்லாதவர்கள்) 18 வயது முதல் 65 வயது வரை தனது கணக்கைத் தொடங்கலாம்.

மேலும் படிக்க | Indian Railways: ஜூலை 1 முதல் ரயில்வேயில் புதிய விதிமுறைகள்

என்பிஎஸ்டி ட்வீட் செய்து தகவல் அளித்தது

தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை (NPST) ட்விட்டரில் இது குறித்து தகவல் அளித்து, தங்கள் வாட்ஸ்அப் சேவை குறித்த தகவல் கொடுத்தது. ட்வீட்டில், ‘அன்பான சந்தாதாரர்களே, என்பிஎஸ் அறக்கட்டளையில் இப்போது வாட்ஸ்அப் வசதி கிடைக்கும். இதனால் உங்கள் சந்தேகங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்!! எங்களை @918588852130-ல் தொடர்பு கொள்ளவும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து என்பிஎஸ் சந்தாதாரர்களும் அடுக்கு I மற்றும் அடுக்கு II கணக்குகள் மற்றும் பங்களிப்பு, வித்ட்ராயல்,  eNPS சேவைகள், திட்ட விருப்பங்களில் மாற்றம், முதலீட்டு முறையை மாற்றுதல் போன்ற என்பிஎஸ் கணக்கு தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. .

என்பிஎஸ் வாட்ஸ்அப் எண்ணை எவ்வாறு பயன்படுத்துவது

- இதற்கு முதலில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கைத் திறந்து, கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் மொபைல் எண்ணுக்கு ஹாய் மெசேஜ் அனுப்பவும்.

- இப்போது வினவல்களின் பட்டியல் உங்கள் முன் திறக்கும்.

- இந்தப் பட்டியலில் உங்கள் பிரச்சனை, பங்களிப்பு, eNPS, எக்ஸிட் போன்றவற்றுடன் தொடர்புடைய கேள்வியை டேப் செய்யவும். 

- இந்தப் பட்டியலில் உங்கள் பிரச்சனை இல்லை என்றால், நீங்கள் 'மேலும் உதவி தேவை' விருப்பத்திற்குச் செல்லவும்.

- இப்போது இது தொடர்பாக என்பிஎஸ் அறக்கட்டளையில் இருந்து 'உங்கள் வினவலை grievances@npstrust.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்' அல்லது 011-47207700 என்ற எண்ணில் அழைக்கலாம்.

- இதை விட கூடுதல் உதவி தேவைப்பட்டால், 022-2499 3499 என்ற எண்ணில் அழைக்கலாம். இந்த எண் eNPS NSDL உதவி எண் ஆகும்.

மேலும் படிக்க | LIC பங்குகள் தொடர் சரிவு : வாங்கியவர்கள் என்ன செய்ய வேண்டும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News