இது என்ன வம்பா போச்சு? பிஎம்ஐ வைத்து உடல் பருமனை முடிவு செய்யக்கூடாதா?

Subtypes Of Obesity: உடல் பருமனுக்கு காரணத்தை கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள்! பிஎம்ஐ வைத்து மட்டும் உடல் பருமனை தீர்மானிக்கக்கூடாதா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 14, 2022, 09:28 PM IST
  • உடல் பருமனுக்கான காரணங்களை மாத்தி யோசிக்கும் விஞ்ஞானிகள்
  • உடல் பருமனுக்கு காரணத்தை கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள்
  • பிஎம்ஐ வைத்து மட்டும் உடல் பருமனை தீர்மானிக்கக்கூடாதா?
இது என்ன வம்பா போச்சு? பிஎம்ஐ வைத்து உடல் பருமனை முடிவு செய்யக்கூடாதா? title=

கட்டுக்கோப்பான உடல் வேண்டும் என்பது பலருடைய ஆசை என்பது மட்டுமல்ல, அதுதான் உடலுக்கும் நமது உயிருக்கும் நல்லது. உடல் பருமனில் இரண்டு வகைகள் உள்ளன.  விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உடல் பருமனின் இரண்டு வெவ்வேறு வளர்சிதை மாற்ற துணை வகைகளை அடையாளம் கண்டுள்ளனர், ஒவ்வொரு வகையும் தனிப்பட்ட உடலியல் மற்றும் மூலக்கூறு அம்சங்களைக் கொண்டுள்ளது, அவை சிகிச்சையின் விளைவை பாதிக்கலாம். 30 அல்லது அதற்கு மேற்பட்ட உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) உடல் பருமன் என வரையறுக்கப்படுகிறது. ஆனால், ஒரு நபர் பருமனாக இருக்கிறாரா இல்லையா என்பதைத் தீர்மானிக்க பிஎம்ஐ ஒரு துல்லியமான நடவடிக்கை அல்ல என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்,

ஏனெனில், இது அடிப்படை உயிரியல் வேறுபாடுகளுக்குக் காரணமாக இல்லை மற்றும் ஒரு நபரின் ஆரோக்கிய நிலையை தவறாகக் குறிக்கும் என்று வான் ஆண்டல் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு வகையான உடல் பருமன் துணை வகையானது அதிக கொழுப்பு நிறைகளுடன் தொடர்புடையது, மற்றொன்று அதிக கொழுப்பு நிறை மற்றும் மெலிந்த தசையால் பாதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | Weight Loss Tips: 10 நாட்களில் 5 கிலோ எடை குறைக்கலாம், இதை மட்டும் செஞ்சா போதும்!!

இரண்டாவது உடல் பருமன் வகை எபிஜெனெட்டிகல் முறையில் தூண்டக்கூடியது என்று தோன்றுகிறது, மேலும் இது சில புற்றுநோய்கள் மற்றும் பிற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் உடல் வீக்கத்துடன் தொடர்புடையது என்று வான் ஆண்டல் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த புதிய கண்டுபிடிப்புகள், உடல் எடை மற்றும் அதனுடன் தொடர்புடைய வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான சிறந்த வழிகளை உருவாக்க உதவும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். உடல் பருமன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 அறிவியல் ஆதரவு உண்மைகள் இவை...

உடல் பருமன் டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது
உடல் பருமன் மட்டுமே வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

கருவுறுதல் திறனை பாதிக்கும் உடல் பருமன்
உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் இருப்பது, குறிப்பாக பெண்களில், கருவுறாமைக்கான வாய்ப்புகளுடன் தொடர்புடையது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | உயரம் குறைவானவரா? உங்கள் குழந்தை உயரமாக வளர இதை செய்தால் போதும்

கோவிட் தொற்று  
COVID-19 தொற்று காரணமாக உடல் பருமன் உள்ளவர்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற கருத்துக்களை தற்போது வெளியாகும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன 

அகால மரணத்திற்கு வழிவகுக்கும் உடல் பருமன் 
புகைபிடித்தலுக்கு அடுத்தபடியாக உடல் பருமன், அகால மரணத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. பருமனான பெண்களை விட பருமனான ஆண்கள் சீக்கிரம் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உடல் பருமன் சிகிச்சை அளிக்கக்கூடியது
ஆரோக்கியமான, குறைந்த கலோரி உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களால் உடல் பருமனை தடுக்கலாம், ஆனால் அதை குணப்படுத்த மருந்து அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த ஒரு இலை போதும் சர்க்கரை நோய் குணமாகும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News