உடல் எடையை குறைக்க ‘இப்படி’ தியானம் செய்யுங்கள்! ரிசல்ட் சீக்கிரமா தெரியும்..

பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பர். அவர்கள் தியானம் செய்தால் மட்டும் போதும்.   

Written by - Yuvashree | Last Updated : Jul 10, 2024, 04:56 PM IST
  • தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
  • வெயிட் லாஸ் செய்யலாம்
  • எப்படி தெரியுமா?
உடல் எடையை குறைக்க ‘இப்படி’ தியானம் செய்யுங்கள்! ரிசல்ட் சீக்கிரமா தெரியும்.. title=

உலகில் பலர், உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வர். ஆனால், அதை தொடர்ச்சியாக செய்யாததால் தோல்வியடைவர். தியானமும் வெயிட் லாஸ் பாதையில் ஒரு அங்கம் தான் என்பது உங்களுக்கு தெரியுமா? குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

வெயிட் லாஸும் தியானமும்:

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உடற்பயிற்சி செய்வது மற்றும் டயட் இருப்பது என்பது இன்றியமையாததாகும். ஆனால் இதனுடன் சேர்த்து தியானமும் செய்தால் பயன் அதிகமாக இருக்கும் என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது. இது பலருக்கு சர்ப்ரைஸாக இருக்கலாம். ஆனால், யோகா செய்வது மன அழுத்தத்தை குறைக்கவும், ஒட்டுமொத்த உடல் நலனை பாதுகாப்பதிலும் தியானம் பெரும் பங்கு வகிக்கிறது. இதனால் உடல் எடை இழப்பும் சீக்கிரமாக நடக்கிறது. 

தியானம் செய்வது நாம் முழு மனதுடன் உணவை சாப்பிட உதவுவதாக கூறப்படுகிறது. இதனால் நாம் சாப்பிடுகையில் மொத்த கவனமும் உணவின் மீதும் பசி போடுவதின் மீதும் இருக்கிறது. தண்ணீர் குடிக்கும் போது கூட நாம் முழு மனதுடன் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் உடல் எடையை குறைக்க முடியும் என்று சில மருத்துவர்கள் கூறுகின்றனர். எளிதாக்குவதில் தியானம் பெரும் பங்கு வகிக்கிறது. இதனால் அதிகம் சாப்பிடுவதையும் பசி உணர்வுடன் இருப்பதையும் தவிர்க்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், எந்த அளவிற்கு நம் வயிற்றுக்கு எடுத்துக் கொள்கிறதோ அந்த அளவிற்கு மட்டுமே நாம் தியானத்தின் மூலம் சாப்பிடுவதாகவும் கூறப்படுகிறது. 

மன அழுத்தத்தை குறைக்கும்: 

உடல் எடை அதிகரிப்புடன் தகுதிபடுவோர் பலர் மன அழுத்தத்தின் காரணமாக ஓவர் ஈட்டிங் எனப்படும் அதிகமாக சாப்பிடும் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். தடுக்க உதவுகிறது தியானம். 

மேலும் படிக்க | கர்ப்பிணிகள் ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்யவே கூடாது! கருச்சிதைவு ஏற்படலாம்..

தூக்கம்: 

உடல் எடையை குறைக்க அனைவரும் ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்பது எழுதப்படாத நியதி. தினந்தோறும் தியானம் செய்வதால் நம் மனதும் உடலும் ரிலாக்ஸ் ஆகி நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கிறது. தூக்கத்தின் போது தான் நம் உடலில் உள்ள பசி ஹார்மோன்கள் ரிப்பேர் ஆகும். சரியான தூக்கம் இல்லையென்றால் இது நடைபெறாமல், நாம் அதிகமாக சாப்பிடும் பழக்கத்திற்கு ஆளாவோம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தியானம் எப்படி செய்வது?

>முதலில் அமைதியான இடத்தில் தரையில் அமர்ந்து அல்லது வசதியான மெத்தையில் அமர்ந்து மனதை சாந்தப்படுத்த வேண்டும். 

>மூச்சு விடுவதில் காணும் செலுத்தி உள்ளெடுக்கும் போதும் வெளியே விடும் போதும் அதில் முழு மனதையும் செலுத்த வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்க உதவும், மனநிலையை ஒருநிலைப்படுத்தவும் உதவும். 

>தினமும் இப்படி பத்து நிமிடங்கள் செய்யலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

மேலும் படிக்க | ஞாபக மறதி, சோர்வு, பலவீனம்... இந்த அறிகுறிகள் இருக்கா? வைட்டமின் பி12 குறைபாடாக இருக்கலாம்

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

Trending News