'உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது பழமொழி. ஆனால், அளவுக்கு அதிகமாக உப்பு உடலில் சேர்ந்தால், அது உயிருக்கே ஆபத்தாகிவிடும். உப்பு என்பது வெறும் சுவைக்காக மட்டும் சாப்பிடுகிறோமா? இல்லை. உப்பு என்பது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர்.
ஒருவர், தினசரி பத்து கிராம் உப்பு மட்டுமே சாப்பிட வேண்டும். அதற்கு அதிகமான அளவில் உப்பு உட்கொள்வதுதான், இன்று பல உடல் உபாதைகள் வருவதற்கு காரணமாகிறது. கருப்பு உப்பில், கடல் உப்பைவிட சோடியம் குறைவாகக் காணப்படுகிறது.
கருப்பு உப்பு உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதனால்தான் கருப்பு உப்பு சாப்பிட மருத்துவர்கள் எப்போதும் அறிவுறுத்துகிறார்கள். கருப்பு உப்பு சாப்பிடுவது, உடலின் பல பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. இரும்பு, சோடியம் மற்றும் கால்சியம் போன்ற கூறுகள் கருப்பு உப்பில் இருப்பதால், இது ஆரோக்கியத்தை பேணி காக்கும்.
கருப்பு உப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
உடல் பருமன் பிரச்சனைக்கு முக்கிய காரணமாகவும் உப்பு அதிக அளவில் பயன்படுத்துவது காரணமாகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தங்கள், உணவில் கருப்பு உப்பு மட்டுமே சேர்த்து சமைக்கலாம். ஒரு மாதம் கருப்பு உப்பை மட்டும் உணவில் சேர்த்துப் பாருங்கள். உடல் எடை குறைவதை நீங்களே உணர்வீர்கள்.
மேலும் படிக்க | அடிவயிற்றில் தொங்கும் தொப்பை குறையுமா? இந்த மசாலாவை உட்கொள்ளுங்கள்
மலச்சிக்கலுக்கு ஏற்ற மருந்தாக பயன்படும் கருப்பு உப்பு
கருப்பு உப்பை நீரில் கரைத்துக் கொண்டு, அத்துடன், இஞ்சி, எலுமிச்சை சாறினை சேர்த்துப் பருகினால், மலம் இளகி விடும். மலச்சிக்கல் பிரச்சனையை எளிதாக தீர்க்க கருப்பு உப்புக்கு நிகர் வேறு எதுவுமே இல்லை.
கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் கருப்பு உப்பு
கெட்ட கொழுப்புத் தன்மையை மட்டுப்படுத்தும் திறன் கொண்ட கருப்பு உப்பினை உணவில் சேர்த்துக் கொள்வதால், கொலாஸ்ட்ரல் அளவு ஒரே சீராக இருக்கும்.
நெஞ்செரிச்சலுக்கு கருப்பு உப்பு
வயிற்றில் அமிலத்தன்மை கூடுவதால்தான் நெஞ்சரிச்சல் உண்டாகிறது. கருப்பு உப்பில், ஆல்கலைன் நிரம்பி இருப்பதால், அதற்கு அமிலத் தன்மையைக் கட்டுப் படுத்தும் தன்மை உண்டு.
நீரிழிவு நோயில் நன்மை பயக்கும் கருப்பு உப்பு
கருப்பு உப்பு பயன்படுத்துவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதுடன், உடலையும் ஆரோக்கியமாக பேணிகாக்கும்.
மேலும் படிக்க | வாழ்வாங்கு வாழ வைக்கும் வாழைத்தண்டு... சந்தோஷமா சாப்பிடுங்க!
செரிமான அமைப்பு சிறப்பாக இருக்கும்
கருப்பு உப்பு, செரிமான அமைப்பை சீராக்குவதால், வயிறு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருக்காது, உடலில் இரும்புச் சத்து குறைபாடு இருக்காது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.
இரத்த அழுத்தத்திற்கு நன்மை பயக்கும் கருப்பு உப்பு
கருப்பு உப்பை உணவில் சேர்த்துக்கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். கருப்பு உப்பில் உள்ள சோடியம் குளோரைடு இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதனால்தான் வெள்ளை உப்பு பயன்பாட்டை தவிர்த்துவிட்டு, கருப்பு உப்பை உணவில் பயன்படுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சருமத்தை ஒளிரச் செய்யும் பீட்ரூட் தோல்! ‘ஓ’ போடச் சொல்லும் சரும அழகு வேண்டுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ