Cracked Heels: குதிகால் வெடிப்புக்கு சூப்பரான வீட்டு வைத்தியங்கள்

பாத வெடிப்பை சரி செய்து, உங்கள் பாதகங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சில எளிய வீட்டு வைத்திய முறைகளை இந்த பதிவில் காணலாம். இவற்றின் மூலம் குதிகால் வெடிப்பிலிருந்து மிகவும் விரைவாக நிவாரணம் பெறலாம்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 17, 2021, 07:50 PM IST
  • தேங்காய் எண்ணெயை தவறாமல் பயன்படுத்தி வந்தால் குதிகால் வெடிப்பு பிரச்சினை நீங்கும்.
  • கற்றாழை நீரேற்றம் மற்றும் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது.
  • வெடிப்பு வந்த மற்றும் உலர்ந்த கணுக்கால் பிரச்சினையை சரி செய்ய ஆப்பிள் வினிகர் உதவியாக இருக்கும்.
Cracked Heels: குதிகால் வெடிப்புக்கு சூப்பரான வீட்டு வைத்தியங்கள் title=

Home Remedies for Cracked Heels: ஒரு ஆண்டில் நாம் பல பருவங்களை எதிர்கொள்கிறோம். வானிலை மாறிக்கொண்டே இருக்கிறது. வானிலை மாற மாற, அதற்கேற்ப, உடல்நிலையும் மாறுகிறது. அதன் தாக்கம் நமது சருமத்தில் தெரியத் தொடங்குகிறது. 

கோடைக்காலத்தில் நம் பாதங்களில் வெடிப்பு (Cracked Heels), தோல் உலர்தல், சொரசொரப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நமது குதிகால்கள் பெரும்பாலும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. கணுக்காலில் எண்ணெய்ப்பசை இல்லாத காரணத்தால், சருமம் மிக விரைவாக வறண்டு போகும். இந்த பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு, அப்பகுதிகளில் வலி மற்றும் வெடிப்புகளிலிருந்து ரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். 

பாத வெடிப்பை சரி செய்து, உங்கள் பாதகங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சில எளிய வீட்டு வைத்திய முறைகளை இந்த பதிவில் காணலாம். இவற்றின் மூலம் குதிகால் வெடிப்பிலிருந்து மிகவும் விரைவாக நிவாரணம் பெறலாம். 

தேங்காய் எண்ணெயின் பயன்பாடு

- தேங்காய் எண்ணெயை தவறாமல் பயன்படுத்தி வந்தால் குதிகால் வெடிப்பு பிரச்சினை நீங்கும். 
- இதற்கு, நீங்கள் இரவில் தூங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட பகுதியில் தேங்காய் எண்ணெயை தடவ வேண்டும்.
- தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கியும் குதிகால் வெடிப்பில் தடவலாம். 
- தேங்காய் எண்ணெய் (Coconut Oil) கொண்டு நன்றாக மசாஜ் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும். 
- தூங்கும் போது சாக்ஸ் அணிய மறக்காதீர்கள்.
- காலையில் எழுதவுடன் முதலில் உங்கள் கால்களை தண்ணீரால் கழுவ வேண்டும்.

ஆப்பிள் வினிகர் மற்றும் எலுமிச்சையின் பயன்பாடு

வெடிப்பு வந்த மற்றும் உலர்ந்த கணுக்கால் பிரச்சினையை சரி செய்ய ஆப்பிள் வினிகர் உதவியாக இருக்கும். அதில் எலுமிச்சை சாற்றையும் சேர்த்தால், இன்னும் சிறந்த முடிவுகளைப் பெறலாம். இவை இரண்டும் அழற்சி எதிர்ப்பு மற்றும் அமிலக் கூறுகளைக் கொண்டிருக்கின்றன. இவை உலர்ந்த செல்களை வெளியேற்றி புதிய செல்களை ஊகுவித்து சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கின்றன. 

ALSO READ: Health Tips: உடல் எடை குறைய ஓமம் -சீரகம் அடங்கிய ‘மேஜிக் பானம்’

- முதலில், ஒரு எலுமிச்சையின் மேற்பரப்பை ஒரு கிரேட்டரின் உதவியுடன் கிரேட் செய்துகொள்ளுங்கள் (துருவிக்கொள்ளுங்கள்).
- ஒரு பாத்திரத்தில் 3 லிட்டர் தண்ணீரை சேர்த்து இந்த கலவையை வேகவைக்கவும்.
- கேஸை அணைத்து விட்டு, இந்த தண்ணீர் மிதமான சூட்டிற்கு வந்தவுடன், இதில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் வினிகரைச் சேர்க்கவும்.
- இப்போது இந்த தண்ணீரில் உங்கள் கால்களை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருங்கள்.

கற்றாழை மற்றும் கிளிசரின் பயன்பாடு

கற்றாழை (Aloe vera) நீரேற்றம் மற்றும் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருப்பதாக தோல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இது வறண்ட சருமத்தின் சிக்கலை நீக்குகிறது. இதில் கிளிசரின் சேர்ப்பதன் மூலம், பாதங்கள் நல்ல ஈரப்பதத்தைப் பெறுகின்றன. வறண்ட மற்றும் வெடித்த சருமத்திற்கு இதன் பயன்பாடு பயனுள்ளதாக இருப்பதற்கான காரணம் இதுதான்.

- 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லையும் ஒரு ஸ்பூன் கிளிசரினையும் கலக்க வேண்டும்.
- உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவிய பின் இந்த கலவையைக் கொண்டு கால்களை மசாஜ் செய்யவும்.
- இப்படி அடிக்கடி செய்துவந்தால், பாதங்களில் உள்ள வெடிப்பு, சொரசொரப்பு அனைத்தும் போய், பாதங்கள் பொலிவுடன் இருக்கும். 

குறிப்பு- பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை. இவற்றை நாங்கள் உறுதிப்படுத்தவில்லை.

ALSO READ: Healthy Hair Tips: நரைமுடியை குறைத்து, தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News