இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப்பழக்கத்தால், உடலில் பல வகையான நச்சுக்களின் கூடாரமாகி விட்டது. இவை பல உடல் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக அமைந்து விடுகின்றது. எனவே உடலை அவ்வப்போது டீடாக்ஸ் செய்து நச்சுக்களை வெளியேற்றுவது அவசியம். அதோடு, மழைக்காலத்தில், பல பருவகால நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. எனவே உடலை உள்ளிருந்து சுத்தம் செய்யும் சில டிடாக்ஸ் பானங்கள் குடிப்பது நன்மை பயக்கும். ஏனெனில் இவை நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கின்றன
உடலில் சேரும் அழுக்குகளை சுத்தம் செய்ய, பலவிதமான ஆரோக்கியமான உணவுகளையும் பானங்களையும் எடுத்துக் கொள்ளவது சிறந்த பலன் கொடுக்கும். சில பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் தேங்கியுள்ள அழுக்குகளையும் நச்சுக்களையும் வெளியேற்றுவதில் உடனடி பலன் கிடைக்கும். அதோடு உடல் எடையையும் குறைக்கலாம்.
வீட்டில் எளிதாக தயாரிக்கக் கூடிய சில பானங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தால், சிறந்த பலன் கிடைக்கும். வீட்டிலேயே டிடாக்ஸ் பானங்களை தயார் செய்யலாம். இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது தவிர, பல கடுமையான நோய்கள் (Health Tips) வராமல் தடுக்கலாம்.
உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் 3 வகையான டிடாக்ஸ் பானங்கள்
ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் 3 வகையான டிடாக்ஸ் பானங்களை எவ்வாறு தயாரிப்பது என்பதை அறிந்து கொள்ளலாம். டிடாக்ஸ் பானம் தயாரிக்க, எப்போதும் சுத்தமான கண்ணாடி பாட்டிலை பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்
இஞ்சி, எலுமிச்சை மற்றும் பசு மஞ்சள் சேர்த்த டீடாக்ஸ் பானம்
எலுமிச்சை, இஞ்சி மற்றும் பசுமஞ்சள் ஆகிய மூன்றையும் நன்றாக சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனை சுத்தமான தண்ணீர் நிரப்பிய கண்ணாடி பாட்டிலில் சேர்க்கவும். இரவு முழுவதும் இது தண்ணீரில் ஊறி இருக்கட்டும். இப்போது காலையில் டிடாக்ஸ் பானம் தயாராகிவிடும். அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட இஞ்சி, குர்குமின் நிறைந்த மஞ்சள் மற்றும் வைட்டமின் சி எலுமிச்சை கலந்த இந்த பானம் மிக அருமையான டீடாக்ஸ் ட்ரிங்க். இது நச்ச்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது தவிர, வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாப்புடன் தோல் ஆரோக்கியமாக மாறும்.
மேலும் படிக்க | தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ்... உச்சி முதல் பாதம் வரை நன்மைகள் ஏராளம்
வெள்ளரி, எலுமிச்சை, புதினா சேர்த்த டீடாக்ஸ் பானம்
சுத்தமான தண்ணீர் நிரப்பிய கண்ணாடி பாட்டிலில் வட்ட வடிவில் மெலிதாக நறுக்கிய வெள்ளி துண்டுகள், எலுமிச்சைத் துண்டுகள், பொடியாக நறுக்கிய புதினா இலைகள் சேர்த்து குறைந்தது 12 மணி நேரம் ஊற வைக்கவும். இரவில் தயாரித்த இந்த நீரை காலையில் வடிகட்டி குடித்து வர உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். புதினா குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது. நார் சத்து அதிகம் கொண்ட வெள்ளரிக்காய் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆப்பிள், துளசி, இலவங்கப்பட்டை சேர்த்த டீடாக்ஸ் பானம்
சுத்தமான தண்ணீர் நிரப்பிய கண்ணாடி பாட்டிலில் பொடியாக நறுக்கிய துளசி இலைகள், துண்டுகளாக வெட்டிய ஆப்பிள் மற்றும் இலவங்கப்பட்டை பொடியை தண்ணீரில் போட்டு சுமார் 10 முதல் 12 மணி நேரம் வரை ஊற விட்டு விட வேண்டும். காலையில், இந்த டிடாக்ஸ் பானத்தை வடிகட்டி குடிக்கவும். இதில் சேர்க்கப்படும் இலவங்கப்பட்டை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. ஆப்பிள் செரிமானத்தை மேம்படுத்துவதோடு இதயத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது. துளசி உடலில் சேரும் நச்சுக்களை நீக்குவதோடு, மன அழுத்தத்தை போக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | முகத்தில் தோன்றும் ‘இந்த‘ மாரடைப்பு அறிகுறிகளை ஈஸியா எடுத்துக்காதீங்க.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ