டீ, காபி குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?
நம்மில் பலர், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். சிலருக்கு காலையில் காபி அல்லது டீ குடித்தால்தான் அந்த நாளே ஓடும் என்று தோன்றும். இருப்பினும், உங்கள் உடலுக்கு அந்த கப் சுகம் எவ்வளவு தேவை என்று நீங்கள் கருதினாலும், அதை வெறும் வயிற்றில் சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு காரணம், காலையில் முதலில் தேநீர் அல்லது காபி குடிப்பது வயிற்றில் அமிலம் உற்பத்தியாவதை அதிகரிக்கச் செய்யலாம், செரிமானக் கோளாறுகளும் ஏற்படக்கூடும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த வகையான பானங்களுக்கு பதில், வேறு சில பானங்களை குடித்தால் உடல் எடையும் குறையும், உடலுக்கும் நன்மை பயக்கும். அவை என்னென்ன?
1.ஜீரா தண்ணீர்:
இரண்டு கப் தண்ணீர் கொதிக்க வைத்து அதில், சிறிதளவு சீரகத்தை தூவவும். இதனுடன் பெருஞ்சீரக விதைகள் மற்றும் ஓமம் ஆகியவற்றை சேர்க்கவும். அந்த கொதிக்கும் தண்ணீரின் அளவு குறைந்தவுடன் அதை மெல்ல பருகவும். இது, உடல் எடையை குறைக்க உதவும். செரிமான கோளாறுகளை தடுக்கும். சாப்பிட்டவை எளிதில் ஜீரணமாக உதவி புரியும். மாதவிடாய் சமயங்களில் வயிறு உப்பசம் ஆவதையும் இந்த ஜீரா தண்ணீர் தடுக்கும்.
மேலும் படிக்க | சட்டுபுட்டுன்னு சக்கரையைக் குறைக்கும் பழம்! தாட்பூட் பழத்தின் மருத்துவ குணங்கள்
2.எலுமிச்சை தண்ணீர்:
ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து பாதியாக வெட்டிக்கொள்ள வேண்டும். இதை குடிக்கும் பதத்தில் இருக்கும் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். இது மிகவும் புளிப்பாக இருக்கும் என்று தோன்றினால் இதனுடன் சிறிதளவு தேன் கலந்து கொள்ளலாம். இதை இன்னும் பயனுள்ளதாக மாற்ற விரும்பினால் இதனுடன் லவங்கப்பட்டையை சேர்த்து கொள்ளலாம். இதை காலையில் எழுந்தவுடன் குடித்தால் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற உதவும். மேலும் உடலுக்கும் இது புத்துணர்ச்சி கொடுக்கிறது. சருமத்தை பராமரிக்கவும் பாதுகாக்கவும் கூட இந்த தண்ணீர் உதவுகிறது.
3.வெதுவெதுப்பான தண்ணீர்:
காலையில் எழுந்ததும் மேற்கூறிய எதையும் குடிக்க பிடிக்காதவராக இருந்தால் நீங்கள் வெறும் தண்ணீரையே பருகலாம். ஒரு டம்ளர் வெறும் தண்னீர் அல்லது வெது வெதுப்பான வெந்நீரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பருகினால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இது, உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதுடன் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும். உடலில் உள்ள கெட்ட டாக்ஸின்ஸை வெளியேற்றவும் தண்ணீர் உதவும்.
4. எப்போது டீ,காபி பருக வேண்டும்..?
மேற்கூறியவற்றை காலையில் எழுந்தவுடன் குடித்தவுடன் உலர் பழங்களை சாப்பிட வேண்டும். பாதாம், பேரிச்சம் பழம், உலர் திராட்சை, பூசணி விதைகள் போன்றவை அதற்கு சிறந்த உதாரணம். அல்லது பழங்களை சாப்பிட விரும்பினாலும் சாப்பிடலா. இவற்றை சாப்பிட்டு முடித்த பிறகு சிறிது நேரம் கழித்து உங்களது டீ அல்லது காபியை குடிக்கலாம். தினமும் டீ அல்லது காபியை குடித்து பழகியவர்களுக்கு இதை பழக்கமாக கொண்டுவர சில நாட்கள் எடுக்கும். ஆனால், டீ அல்லது காபி உடலுக்கு விளைவிக்கும் தீங்குகளை இந்த பானங்கள் விளைவிக்காது. இருப்பினும், இவற்றை குடித்தப்பிறகு உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.
மேலும் படிக்க | ஒரே நாள்ல ஹார்ட் அட்டாக் வராது! உயிருக்கே உலை வைக்கும் இந்த அறிகுறிகள் இருக்கா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ