Interim Budget 2024: இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? ஏன் தாக்கல் செய்யப்படுகிறது?

2024 Interim Union Budget of India: பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? இடைக்கால பட்ஜெட் ஏன் தாக்கல் செய்யப்படுகிறது? இடைக்கால பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு என்ன? உட்பட பல விவரங்களை குறித்து பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 31, 2024, 12:20 PM IST
  • ஏப்ரல், மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெறலாம்.
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி 9 வரை நடைபெறும்.
Interim Budget 2024: இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? ஏன் தாக்கல் செய்யப்படுகிறது? title=

Union Interim Budget 2024 Expectations: பிப்ரவரி 1, 2024 அன்று, தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் கீழ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இறுதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். வரும் ஏப்ரல், மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். மக்களவை தேர்தல் முடிந்தவுடன் மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் அரசு, வரும் ஜூலை மாதம் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். நடப்பு ஆட்சியின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன? ஏன் தாக்கல் செய்யப்படுகிறது?

பொதுவாக மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரையிலான இடைப்பட்ட காலத்திற்கான நிதித் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தாக்கல் செய்யப்படுவதே இடைக்கால பட்ஜெட் ஆகும். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மக்களவை தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் நடக்கும் ஆண்டில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

நிதியாண்டு என்றால் என்ன? 

இந்தியாவை பொறுத்த வரை நிதியாண்டு என்பது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் வரை இருக்கும் காலத்தை நிதியாண்டு எனக் கணக்கிடுகிறோம்

மேலும் படிக்க - Budget 2024: வரி சலுகை முதல் வட்டி விகிதம் வரை... சாமானியர்களின் முக்கிய எதிர்பார்ப்புகள்..!

இடைக்கால பட்ஜெட் எதிர்பார்ப்புகள்

ஏற்கனவே ஐந்து ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாளை (பிப்ரவரி 1) புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளார். பொதுத் தேர்தல் வர உள்ளதால், பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

வருமான வரி, கடனுக்கான வட்டி, ஜிஎஸ்டி, ஹெல்த் செக்டர், கல்வி, நிதி, விவசாயம், உள்கட்டமைப்பு, உற்பத்தி என பலதரப்பட்ட துறைகள் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் என்னவாக இருக்கும் ஆவலுடன் காத்திருக்கின்றன.

இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்

இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் அமர்வு தொடங்கும். இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (வியாழக்கிழமை) தாக்கல் செய்ய உள்ளார். இடைக்கால பட்ஜெட் பொதுவாக மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரையிலான இடைப்பட்ட காலத்திற்கான நிதித் தேவைக்காக தாக்கல் செய்யப்படுகிறது.

வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படுமா?

கடந்த 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய வருமான வரி முறையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் காரணமாக இந்தமுறை  வருமான வரி குறித்து எந்த அறிவிப்பும் இருக்காது எனத் தெரிகிறது. எனவே நாளை தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கான வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க - பல நிதியமைச்சர்களின் சாதனைகளை பின்தள்ளி முன்னேறும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நிதிப்பற்றாக்குறையை குறைப்பதில் கவனம்

நாளை தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் முக்கியமாக நிதிப்பற்றாக்குறையை குறைப்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தும் எனத் தெரிகிறது. உள்கட்டமைப்பிற்கான செலவினங்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முதன்மையாக அறிவிப்புக்கள் இருக்கலாம். 

விவசாயிகள், பெண்களுக்கு முக்கியத்துவம் 

தேர்தல் நெருங்கி வருவதால், விவசாயிகள், பெண்களை குறிவைத்து, அவர்களின் நலன்களுக்கான சில நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம்.

இடைக்கால பட்ஜெட் நாள் மற்றும் நேர விவரங்கள்

இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாளை (பிப்ரவரி 1, வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்கிறார். இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 31, புதன்கிழமை) தொடங்கி பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. 

மேலும் படிக்க - Budget 2024: பட்ஜெட்டில் எதிரொலிக்கப்போகும் இந்தியாவின் மொத்த கடன்! வெளியான அதிர்ச்சி தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News