பிரதமர் நரேந்திர மோடியை "நீச்" எனும் இந்தி வார்த்தையால் தரம்தாழ்த்திய காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், பிரதமர் மோடியை குறித்து பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியநு.
இதனையடுத்து குஜராத்தில் பிரதமர் மோடி பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது இந்த விவகாரத்தினை குறிப்பிட்டு, குஜராத் மக்கள் காங்கிரசுக்கு வாக்கால் பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
இவ்விவகாரம் ராகுல் காந்தி காதில் விழ, மணிசங்கர் அய்யர் அவர்கள் உடனடியாக பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனையடுத்து மணிசங்கர் அய்யர், தனது தாய் மொழி இந்தி இல்லை, அதனால் தான் கூறிய வார்த்தையின் வீரியம் குறித்து எனக்கு தெரியாது என மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
#ManiShankarAiyar suspended from primary membership of Congress Party. pic.twitter.com/S9FYt1vb15
— ANI (@ANI) December 7, 2017
எனினும் பூதாகரமாக வெடித்த இவ்விவகாரத்தால், மணிசங்கர் அய்யர் தற்போது காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக மணிசங்கர் அய்யர் விளக்கம் அளிக்க காங்கிரஸ் நோட்டீஸ் விடுத்துள்ளது.