புதுடெல்லி: பாடகர் கைஆஷ் கேர் பாடிய ‘மோர் நிராலா’ என்ற பாடலை பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். அது மிகவும் வைரலாகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ள பாடலை பிரபல பாடகர் பாடலை கைலாஷ் கைர் பாடியுள்ளார். பிரதமர் நரேந்திராவின் பல புகைப்படங்களும் பாடலுடன் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தி மொழியில் பாடப்பட்டுள்ள அந்த பாடலின் வரிகள் 'மனோகக் மோர் மோர் நிரலா' என்று தொடங்குகிறது.
சிறுவயதில் இருந்து இது வரை பிரதமர் நரேந்திர மோடியின் மறக்கமுடியாத பல புகைப்படங்கள் இந்த வீடியோவில் சேர்க்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ள பாடல் கொண்ட வீடியோ 3.52 நிமிடங்கள் வரை நீள்கிறது.
ஒரு வகையில் பார்த்தால், இந்தப் பாடலே பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை பல்வேறு கோணங்களில் காட்டும் புகைப்படங்களின் தொகுப்பாக உள்ளது.
மனம் கவரும் வண்ணங்கள் கொண்ட மயிலுக்கு, பல்வேறு திறமைகள் ஒன்றிணைந்த பிரதமருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக பாடலாசிரியர் நினைத்தாரோ என்னவோ?
மயில் நம் நாட்டின் தேசியப் பறவை. பிரதமர் மோடி, நம் நாட்டின் தேசியப் பெருமை என்பதைச் சொல்வதாகவே இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் பொருள் கொள்கின்றனர்.
பாடலுக்கு சேர்க்கப்பட்டிருக்கும் ஒளித்தொகுப்பில், மயிலைப் போல் நடனமாடும் பாங்கும் கண்களைக் குளிரச் செய்கிறது. மொத்தத்தில் பல்வேறு வண்ணங்கள் கொண்ட மயிலே என்று பிரதமரை விளிக்கும் ‘மோர் நிராலா’ காதுகளுக்கும், கண்களுக்கும் நிறைவாக, மனதை குளிரச் செய்வதாக இருக்கிறது.
Also Read | இந்தியாவில் புனிதமான ஸ்வஸ்திக் சின்னத்தின் பெயரை மாற்ற மறுத்த அமெரிக்க கிராமம்